விருட்ச சாஸ்திரம் : வீட்டில் சீதாப்பழ மரத்தை வளர்க்கலாமா.?! - Seithipunal
Seithipunal


வீட்டில் சீதாப்பழ மரத்தை வளர்க்கலாமா?

சீதாப்பழம் வருடம் முழுவதும் கிடைப்பதில்லை. குறிப்பிட்ட பருவத்தில்தான் மரத்தில் காய்க்கும். அடர்ந்து, உயரம் குறைவாக உள்ள சீதாப்பழ மரத்தின் முற்றிய கிளைகளில் காய்க்கும் காய்களை, நன்கு வளர்ந்த பிறகு காயாகவே பறித்து விடுவார்கள். பறித்த பிறகே பழுக்க வைப்பார்கள்.

பலர் சீதாப்பழத்தை சாப்பிடத் தயங்குவது அதில் அதிகமாக உள்ள விதைகளின் காரணமாகத்தான். இந்த விதைகளை விதைத்து மட்டுமல்லாமல், பதிய வைத்தும் சீதாப்பழ மரங்களை வளர்க்கலாம். 

முதன்முதலில் மேற்கு இந்தியத் தீவினர்களால்தான் சீதாப்பழ மரங்கள் வளர்க்கப்பட்டன. 

இதன் சுவையும், மணமும் எல்லோரையும் கவரவே இன்று உலகில் எல்லா இடங்களிலும் சீதாப்பழ மரம் வளர்க்கப்படுகிறது. சீதாப்பழம் எல்லோருக்கும் பிடித்திருப்பதால் ஜாம், ஜெல்லி, ஐஸ்கிரீம் மற்றும் பழரசங்கள் செய்யப் பயன்படுத்துகிறார்கள்.

சீதாப்பழ மரத்தின் இலை, பட்டை, காய், பழம், விதை அனைத்துமே மருந்துதான். 

காய் துவர்ப்பாக இருப்பதால் கழிச்சல், சீதக்கழிச்சல் இருக்கும்போது சாப்பிடலாம். சற்று நேரத்தில் இந்த கழிச்சல் நோய் சரியாக போகும். 

பழம் இனிப்பாகவும், சுவையாகவும் இருப்பதால் ரத்தம் அதிகம் ஊற வழிசெய்யும். உடல் வெயிட் போட நினைப்பவர்கள் நிறைய சீதாப்பழம் சாப்பிட்டால் போதும். வாந்தி அதிகம் இருக்கும் போது சீதாப்பழம் சாப்பிட்டால் வாந்தி நின்று போகும். டி.பி என்ற காசநோய் இருக்கும் நோயாளிகள் சீதாப்பழத்தை கண்டிப்பாக சாப்பிடுவது நல்லது. காசநோயின் தீவிரத்தை குறைக்கும்.

சீதாப்பழத்தின் விதைகளை பொடியாக்கி ஆறாத புண்களின் மேல் போட்டால் அந்த புண்கள் நாளடைவில் காய்ந்து ஆறிவிடும். 

அதே போல் இலைகளை தண்ணீர் விடாமல் அரைத்து புண்களின் மேல் பற்று போல் போட்டாலும் புண்கள் ஆறிவிடும்.

'கஸ்டர்ட் ஆப்பிள்" என்று அழைக்கப்படுவதன் காரணம் என்ன?

நம் நாட்டில் சீதாப்பழம் என்று அழைக்கப்படும் இப்பழம் ஆங்கிலத்தில் 'கஸ்டர்ட் ஆப்பிள்" என்றழைக்கப்படுகிறது. 'கஸ்டர்ட்" என்ற ஐஸ்கிரீம் போன்ற சுவை இந்தப் பழத்திற்கு இருப்பதால் இதற்கு இப்பெயர் வந்தது.

எங்கு வளர்க்கலாம்? 

சீதாப்பழங்கள் அதிக இனிப்பு சுவை கொண்டது. குளிர்ச்சியை உண்டாக்கும். ஆடுகள் திண்ணாத மரம் என்பதால் எங்கும் வளர்க்கலாம்.

வீட்டின் பின்புறம் சீதாப்பழ மரத்தை வளர்க்கலாம். சீதாப்பழ மரம் வாஸ்து மரம் என்று கூறப்படுகிறது. மேலும் சீதாப்பழம் உடலுக்கு ஆரோக்கியமானது.

வறட்சி அதிகமாக உள்ள இடங்களிலும் கூட சீதாப்பழ மரத்தை வளர்க்கலாம்.

எந்த திசையில் வளர்க்கலாம்?

வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் சீதாப்பழ மரத்தை வளர்க்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seethapazham benifits


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->