ப்ரொட்டீன்.. நிறைந்த கொண்டைக்கடலை பிரியாணி.. சூப்பராக சிம்பிளாக செய்யலாம் வாங்க.!  - Seithipunal
Seithipunal


புரதச்சத்து நிறைந்த சுவையான கொண்டைக்கடலை பிரியாணியை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் : 

கொண்டக்கடலை - 250 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 3
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி புதினா இலைகள் - தலா ஒரு பிடி
தயிர் - 2 தேக்கரண்டி 
பட்டை- 3
கிராம்பு - 5
ஏலக்காய் - 5
பிரிஞ்சி இலை - 1
ஸ்டார் அனிஸ் - 1
நெய் - 4 தேக்கரண்டி
அரிசி - 2 கிளாஸ்
உப்பு,
மிளகாய் தூள் தேவைக்கேற்ப்ப

செய்முறை :

கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

மிக்ஸி ஜாரில் 2 பட்டை துண்டு, 3 ஏலக்காய், 3 கிராம்பு, 1 ஸ்டார் அன்னாசி பூ போட்டு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு குக்கரை வைத்து நெய் ஊற்றி நெய் சூடாகியதும் ஒரு துண்டு பட்டை, 2 ஏலக்காய், 2 கிராம்பு சேர்த்து வதக்கியப் பின்   நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்றாக பொன்னிறமாகும் அளவிற்கு வதக்க வேண்டும்.

இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை மணம் போகும் வரை வதக்கவும்.

பின்பு கொத்தமல்லி புதினா இலைகளை பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கவும். 

தயிர், மிளகாய் தூள், அரைத்து வைத்திருக்கும் தூள் மற்றும் கொண்டக்கடலையையும் சேர்த்து நன்றாக கிளறி எண்ணெய் வெளியிடும் வரை கொதிக்க விடவும். 

பிறகு மூன்று கிளாஸ் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு, உப்பு போட்டு நன்றாக கொதிக்க விட்டு அரிசியை சேர்த்து நன்றாக கிளறி ஒரு கொதி வந்ததும் குக்கரில் இரண்டு விசில் விட்டு வேகவைத்து எடுத்தால் சுவையான சத்தான கொண்டைக்கடலை பிரியாணி ரெடி.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Proteins kondaikadalai Briyani recipe


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->