நார்சத்துமிக்க டயட்டுக்கு உகந்த முட்டைகோஸ் குழம்பு.. செய்வது எப்படி.?! - Seithipunal
Seithipunal


முட்டைக்கோஸ் குழம்பு:

உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு முட்டைக்கோஸ் ஒரு பயனுள்ள உணவாக இருக்கும். முட்டைக்கோஸில் அதிகளவு நார்சத்துக்கள் நிறைந்துள்ளது. இப்பொழுது முட்டைக்கோஸை பயன்படுத்தி முட்டைக்கோஸ் குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

தக்காளி - 2
பெரிய வெங்காயம் - 2
பட்டை - 2
ஏலக்காய் - 4
கிராம்பு - 3
நறுக்கிய முட்டைக்கோஸ் - 2 கப்
சோம்பு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
தனியாத்தூள் - 1 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
முந்திரி பருப்பு - 5
தேங்காய்த்துருவல் - 1 கப்

செய்முறை :

முட்டைக்கோஸ் குழம்பு செய்வதற்கு முதலில் பெரிய வெங்காயம், தக்காளியை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் நறுக்கிய முட்டைக்கோஸை போட்டு, அதனுடன் 4 கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும்.

அடுத்து தேங்காய்த்துருவல், சோம்பு, முந்திரி பருப்பு ஆகிய அனைத்தையும் மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு அரைத்து குழம்பில் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.

பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து, கொதிக்க வைத்துள்ள குழம்பில் சேர்த்து கலக்கினால் முட்டைக்கோஸ் குழம்பு ரெடி.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

muttaikos kuzhambu foe diet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->