சேமிப்பை மேம்படுத்த விருப்பமா? உடனே இதை செய்யுங்கள்.!! - Seithipunal
Seithipunal


வாழ்வில் நம்முடைய தேவைகளை நிறைவேற்ற நமக்கு பணம் அவசியம் தேவை. தேவைக்கு ஏற்ப பணத்தை சம்பாதிக்க வேண்டும். முடியவில்லையா வரக்கூடிய வருமானத்திற்கு ஏற்ப செலவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். இதுதான் முதல் வழி. இதை நீங்கள் புரிந்து கொண்டு நடந்தாலே உங்களுடைய வாழ்க்கை சுகமாக இருக்கும்.

கற்பனையான ஆடம்பர வாழ்க்கையை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, நிதர்சனமான வாழ்க்கைக்குள் நாம் வர வேண்டும். பிறகு வாழ்க்கையில் பண கஷ்டம் உங்களுக்கு ஒரு பெரிய கஷ்டமாக தெரியாது. பணத்தை அதிகம் சம்பாதிக்க இப்போது ஒரு பரிகாரத்தை பார்க்கலாம்.

பரிகாரம் செய்யும் முறை : 

பரிகாரத்தை செய்ய நமக்கு தேவையான பொருட்கள் இரண்டு.

சிறிதளவு பச்சை கற்பூரம், ஒரு சிறிய துண்டு படிகாரக்கல். 

ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்துக் கொண்டு உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனையை எழுத வேண்டும். அது எந்த பிரச்சனையாக இருந்தாலும் எழுதலாம்.

பிரச்சனையை சுருக்கமாக எழுதி அந்த காகிதத்திற்கு நடுவே ஒரு பச்சைக் கற்பூரத்தையும், ஒரு சிறிய துண்டு படிகாரத்தையும் வைத்து அந்த காகிதத்தை மடித்து கொள்ளுங்கள். இந்த காகிதத்தை ஒரு மஞ்சள் துணியில் கட்டி அப்படியே பூஜை அறையில் ஒரு அலமாரியில் வைத்து விடுங்கள்.

பரிகாரத்தை செய்யும்போது குலதெய்வத்தை மட்டும் மனதார நினைத்து கொண்டால் போதும். 

உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் இன்னல்களுக்கு கூடிய சீக்கிரத்தில் விடிவுகாலம் பிறக்கும். 

பிரச்சனையை இந்த பிரபஞ்சம் சீக்கிரத்தில் தீர்த்துக் கொடுக்கும். காகிதத்தில் எழுதிய விஷயம் 48 நாட்களுக்குள் நடக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

money saving tips


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->