தண்ணீர் குறைவாக குடிப்பதால் இவ்வளவு பிரச்சினைகளா.? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.! - Seithipunal
Seithipunal


கோடை காலத்தில் மட்டுமின்றி எந்த காலமாக இருந்தாலும் உடலில் நீர் சத்து குறைந்தால் பல்வேறு வகையான நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக வெயில் காலத்தில் உடலுக்கு தேவையான நீரை குடிக்க வில்லை என்றால் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும் எனவும் எனவே வெயில் காலத்தில் அதிக நீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

நீரிழப்பு ஏற்பட்டால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாக வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிறுநீர் கற்கள் உருவானால் உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்படக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

எனவே உடலில் நீர் இழப்பை சரி செய்ய தினமும் உடலுக்கு தேவையான தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் பழங்கள் மற்றும் பழச்சாறுகள் இளநீர் ஆகியவற்றை குடிக்க வேண்டும்.

உடலில் நீர்ச்சத்து குறைவதால் செரிமான கோளாறுகள் ஏற்படும் எனவும் அதனால் பல்வேறு வகையான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதன் காரணமாக தர்பூசணி, நெல்லிக்காய், வெள்ளரி போன்ற உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இது போன்ற உணவுகள் உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Many disease attack for less drinking water


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->