Healthy ஆன கொள்ளுப் பருப்பு சூப் பண்ணலாமா...! - Seithipunal
Seithipunal


கொள்ளுப் பருப்பு சூப்
தேவையான பொருட்கள் :
பொருள்                                          - அளவு
கொள்ளுப் பருப்பு                    அரை கப்
பூண்டு பல்                                   5 
தக்காளி                                        2
மிளகு                                        1 டீஸ்பூன்
சீரகம்                                        1 டீஸ்பூன்
துவரம் பருப்பு                           2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள்                   ஒரு சிட்டிகை
கொத்துமல்லி தழை                ஒரு கைப்பிடி
தாளிக்க :
நல்லெண்ணெய்               -             தேவைக்கேற்ப
கடுகு                                      -        அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள்                           -       அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை                      -         ஒரு கொத்து
காய்ந்த மிளகாய்                   -       2


செய்முறை :
முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளுப் பருப்பை சிவக்க வறுத்துக்கொள்ளவும். பின் அத்துடன் பூண்டு பல், தக்காளி, மிளகு, சீரகம் மற்றும் துவரம் பருப்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்.பிறகு அரைத்தக் கலவையில் 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு க.திக்க விடவும்.அதன் பின்னர்,நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்துமல்லி தழை தூவி பறிமாறலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lets make healthy lentil soup


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->