சுவையான மட்டன் நூடுல்ஸ்.. செய்வது எப்படி.?! - Seithipunal
Seithipunal


குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று நூடுல்ஸ் ஆகும். அவற்றுடன் சிறிது சத்தான பொருட்களை சேர்த்து கொடுக்கையில் அவர்கள் மகிழ்ச்சியுடன் சத்தான உணவுகளை எடுத்து கொள்வர். இப்பொழுது மட்டன் நூடுல்ஸ் எவ்வாறு செய்வது என பார்க்கலாம். 

தேவையான பொருட்கள் :

மட்டன் - 100 கிராம்,

நூடுல்ஸ் - 1 பாக்கெட்,

வெங்காயத்தாள் - தேவைக்கு,

முட்டைகோஸ் - 1/4,

எண்ணெய் - 5 தேக்கரண்டி,

வெங்காயம் - 2,

குடைமிளகாய் - 1,

முட்டை - 2,

கேரட் - 3,

பீன்ஸ் - 2,

சோயா சாஸ், 

மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி,

உப்பு, சர்க்கரை - அரை தேக்கரண்டி.

மட்டன் நூடுல்ஸ் செய்முறை: 

மட்டனை நன்றாக சுத்தமாக கழுவி பொடிப்பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும். வெங்காயதாள் மற்றும் வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கேரட், குடைமிளகாய் மற்றும் பீன்ஸை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். 

நூடுல்ஸை வேகவைத்து எடுத்து கொள்ளவும். மட்டனை உப்பு மஞ்சத்தூள் சேர்த்து வேகவைத்து கொள்ளவும். 

கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து வெங்காயத்தை போட்டு வதக்கவும். பின்னர், முட்டைகோஸ், கேரட், பீன்ஸ், குடைமிளகாய் சேர்த்து வதக்கி பின்னர் ஓரளவு வெந்த பிறகு மட்டனை சேர்த்து நன்றாக வதக்கவும். 

பின்னர் முட்டையை உடைத்து நன்றாக உதிரியாக வரும்படி கிளறி விடவும். பின்னர் இறுதியாக நூடுல்ஸ் சேர்த்து நன்றாக கிளறி கடைசியாக உப்பு, மிளகுத்தூள், சர்க்கரை, சோயா சாஸ் சேர்த்து நன்றாக கிளறி விடவும். பின்னர் வெங்காயத்தாள் சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும். சுவையான மட்டன் நூடுல்ஸ் ரெடி.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

how to prepare mutton noodless in tmail


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->