உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்க, இதை செய்யுங்கள்.!! - Seithipunal
Seithipunal


நம் முன்னோர்கள் இதனை தெளிவாக அறிந்து வைத்திருந்தனர் பருவத்திற்கேற்ற உணவுகளை உண்டு ஆரோக்கியமாக இருந்தனர்.   அந்த வகையில் நூறாண்டு வாழ்வது எப்படி? என்று பயனுள்ள சில குறிப்புகள்  

எதற்கும் கவலைப்படாதீர்கள். ஒரு பொழுதும் அவசரப்படாதீர்கள். துரித உணவுகளை உண்ணாதீர்கள். நல்ல சத்துள்ள உணவுகளையே உட்கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 7 மணி நேரம் உறங்குங்கள். எதற்கெடுத்தாலும் மருந்து கடை பக்கம் சென்று, சிறிய உடல் உபாதைகளுக்கும் மருந்துகளை வாங்கி உட்கொள்ளாதீர்கள். தளர்ச்சியான கழுத்துப்பட்டி கொண்ட ஆடைகளை அணியுங்கள். இறுக்கமான கழுத்துப்பட்டி வைத்துள்ள ஆடைகள் கழுத்தில் உள்ள தைராய்டு கோளத்தை இறுக்கி ரத்த ஓட்டத்தைத் தடுத்து உடலில் பல பிரச்சினைகளை உண்டு பண்ணும்.

Tamil online news Today News in Tamil

sunlight, nature images,

முடிந்தவரை சூரிய ஒளியில் இருங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். உடலுக்கு சூரிய ஒளி மிகவும் முக்கியம். நன்கு ஆழமாக சுவாசியுங்கள். தினந்தோறும் நீராடுங்கள். வாரத்திற்கு ஒரு முறை ஆவி பிடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். மது வகையை விலக்குங்கள். அளவுக்கு மீறி வெப்பம் நிறைந்த இடத்தில் நீண்ட நேரம் இருக்காதீர்கள். நல்ல காற்றோட்டமில்லாத இடத்திலும் இருக்காதீர்கள்

குளிர்காலத்தில் அரிசி, கோதுமை, பார்லி, வாழை, தக்காளி, தேங்காய், ஆப்பிள், பேரிக்காய் உண்ணுங்கள். இந்த பருவத்தில் இந்த உணவுகள் உடலுக்கு நலன் தருபவை. 

மழைக்காலத்திலும், குளிர்காலத்திலும் உடலில் வாயு அதிகரிக்கும். இந்த வாயுவை நீக்க ஒரு தேக்கரண்டியளவு திரிகடுகம் சூரணத்தை பாலில் கலந்து உண்ணுஙகள். 

milk, drinking milk, cute boy drinking milk,

இது உடலில் உள்ள வாயுவை நீக்கி பசியைத் தூண்டும். குளிர்காலத்தில் உடலில் லேசாக நல்லெண்ணெய் தேய்த்து வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள். இது உடலுக்கு இதம் தரும்.

இரவு உணவுக்கு பின் சிறிது பால் அருந்துங்கள். இது மலச்சிக்கலை நீக்கும். இதுபோன்ற உணவு பழக்கவழக்கத்தை பின்பற்றும் போது உடல் ஆரோக்கியம் அதிகரித்து, ஆயுளும் நீடிக்கும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to maintain your body


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal