நோய் பாதிப்பை தடுக்க கட்டாயம் தவிர்க்க வேண்டிய பழக்கங்கள் இதுதான்.! - Seithipunal
Seithipunal


கட்டாயம் தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்:

நாம் அன்றாடம் செய்யும் சில சாதாரண பழக்கவழக்கங்கள் கூட நோய் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. இப்பழக்கங்கள் நம் உடல்நலத்தில் சிறிது சிறிதாக பாதிப்பினை ஏற்படுத்தி நம்மை கொல்லும் விஷமாகிறது.

நம்மில் பல பேரிடம் இருக்கும் கெட்டப்பழக்கம் நகம் கடித்தல் ஆகும். நாம் விரலில் உள்ள நகத்தினை கடிக்கும்போது அதில் உள்ள கிருமிகள் நமது உடலுக்குள் சென்று நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

நமது விரலில் ஏராளமான கிருமிகள் நிறைந்து இருக்கும். மூக்கு மற்றும் வாயில் நாம் விரலை வைப்பதால் நம் கையில் உள்ள கிருமிகள் உடலுக்குள் எளிதாக சென்று நோய் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.

தரம் குறைவான கண்ணாடியினை பயன்படுத்தி சூரியனை பார்க்கும்போது அதிலிருந்து வரும் ஊதாக்கதிர்கள் நேரடியாக நமது கண்ணின் கருவிழியினை தாக்கி பார்வை குறைபாடுகளையும், சில சமயங்களில் புற்றுநோய் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.

கால்மேல் கால் போட்டு அமர்வதால் இரத்தநாளங்களில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும், இதனால் உயர் மனஅழுத்தம், நரம்பு சிதைவு போன்ற பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

உச்சி முதல் உள்ளங்கால் வரை போர்த்திக் கொண்டு தூங்கும்போது கார்பன்-டை-ஆக்சைடு அளவுக்கு அதிகமாக அதிகரித்து மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

தொடர்ந்து செல்போனில் ஹெட்ஃபோனை உபயோகிப்பதால் நோய்தொற்று ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாது, காது கேட்கும் திறனும் குறைகிறது.

அதிக எடையுள்ள பைகளை நாம் எடுத்து செல்லும்போது நமக்கு தோல் வலி, முதுகு தண்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

அதிக உயரமுள்ள செருப்புகளை அணியும்போது, குதிகாலில் எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

காலை உணவானது ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம். இதனை தவிர்க்கும்போது உடல் ஆற்றலை குறைத்து, உடல் எடையினை அதிகரிக்க செய்கிறது.

ஜங்க் உணவுகளை வாரத்திற்கு 4-5 முறை சாப்பிட்டால், உடலில் நிச்சயம் பிரச்சனை ஏற்படும்.

நீண்ட நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்த உணவுகளைச் சாப்பிடுவதால் வயிற்று உபாதைகளும், செரிமானப் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. கண்களுக்குத் தெரியாத பூச்சிகள் உணவுகளின் மேல் படர்ந்திருக்கும். இது, வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to ignore disease for this way


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->