உடலை சிக்கென பிட்டாக வைத்துக்கொள்ள இதோ டிப்ஸ்.! - Seithipunal
Seithipunal


பலவிதமான காரணத்திற்க்காக கிடைத்த உணவுகளை., அந்த நேரத்தில் அவசர அவசரமாக எடுத்துக்கொண்டு சாப்பிட்டும் சாப்பிடாமலும் நமது பணியை தொடர்ந்து வருகிறோம். இந்த பழக்கம் ஒரு நாள் என்றால் பிரச்சனை இல்லை., தினமும் பெரும்பாலானோர் இதே பழக்கத்தை கையாள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். காரணம் அவர்களின் பணி சூழல் என்றாலும்., முடிந்தளவு உடல் நலத்தை பேணுவது நல்லது. இனி உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த செய்யவேண்டியதை காண்போம். 

இல்லத்தில் இருக்கும் சமயத்தில் பெற்றோருக்கு தெரியாமல் வெள்ளை சர்க்கரையை உண்பது வழக்கம். வெள்ளை சர்க்கரை விஷம் என்பது பலருக்கு தெரியாமலேயே இருக்கிறது. வெள்ளை சர்க்கரையானது புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும் கூறுகின்றனர். வெள்ளை சர்க்கரையில் இருக்கும் சுவையானது நாவை அடிமைப்படுத்தி., உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடும். 

அதிகளவு சர்க்கரையை சாப்பிட்டாக வேண்டும் என்ற தொடர் ஆசையை தூண்டி ., உடலில் இருக்கும் தாது உப்புக்களை அழித்து., அதிகளவு தேவையற்ற பசியினை தூண்டும். இந்த வெள்ளை சர்க்கரையை சாப்பிடாமல் இருப்பது நல்லது. தினமும் நாம் சாப்பிடும் போது உடலில் இருக்கும் செல்களானது வளர்ந்து இருக்கும்., இந்த சமயத்தில் உண்ணாவிரதம் இருக்க நேரிட்டால்.,வளர்ந்த செல்களின் மூலமாக உடலை பராமரிக்கவும் உதவுகிறது. உண்ணாவிரதம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இருக்கலாம். இந்த நேரத்தில் நீர் மட்டும் அருந்தலாம். 

தினமும் கண்டிப்பாக குறைந்தது அரைமணி நேரம் நடந்து கொடுத்து வந்தால்., கை மற்றும் கால்களுக்கு பலம் சேர்க்கிறது. முறையான உடற்பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்டால் நமது உடல் வலுப்பெறும். ஒரு மணி நேரத்திற்கு மேல் நாற்காலியிலேயே அமர்ந்து இருக்காமல்., ஒரு மணிநேரம் தாண்டிய பின்னர் எழுந்து நடந்து கொடுப்பது நல்லது. 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how t manage your body fitness


கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
Seithipunal