குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதி…! - கோடையில் வியர்க்குருவை கட்டுப்படுத்த 10 சூப்பர் டிப்ஸ்...! - Seithipunal
Seithipunal


வெயில் சீசன் ஆரம்பித்துவிட்டாலே சிலருக்கு உடல் முழுவதும் வியர்க்குரு பரவுவது வழக்கம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரையும் விட்டுவைக்காத இந்த தோல் பிரச்சனை, அதிக வெப்பத்தால் மேலும் மோசமடைகிறது.

அதனால், கோடை காலத்தில் உடலை உள்ளிருந்து குளிர்விக்கவும், தோலை பாதுகாக்கவும் சரியான உணவு மற்றும் பழக்கவழக்கங்கள் அவசியம். குறிப்பாக, இந்த சீசனில் கிடைக்கும் பழங்கள் மற்றும் இயற்கை முறைகள் வியர்க்குருவை கட்டுப்படுத்த சிறந்த தீர்வாக இருக்கும்.


வியர்க்குருவை சமாளிக்கும் எளிய தீர்வுகள்
ஐஸ் கட்டிகளை துணியில் கட்டி தடவினால் அரிப்பு மற்றும் சூடு தணியும்.
எப்போதும் காற்றோட்டமான இடங்களில் இருப்பது நல்லது.
வழக்கத்தை விட அதிகமாக தண்ணீர் குடிப்பது அவசியம்.
வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
பருத்தி ஆடைகள் அணிவது தோலை சுவாசிக்க உதவும்.
இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், கிர்ணிப்பழம் போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் உடலை குளிர்வித்து வியர்க்குருவை குறைக்க உதவும்.
பனை நுங்கு உடல் வெப்பத்தை தணிக்கும் இயற்கை மருந்து – அதிகமாக எடுத்துக்கொள்ளலாம்.
கற்றாழைச் சாறு தடவினால் எரிச்சல் குறையும்.
வேப்பிலை, சந்தனம், மஞ்சள் ஆகியவற்றை சம அளவில் அரைத்து, பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி சில நேரம் கழித்து குளித்தால் கிருமி தொல்லை குறையும்.
வெறும் சந்தனத்தை உடலெங்கும் தடவுவதும் குளிர்ச்சி தரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

From children adults they suffer 10 super tips control sweating summer


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->