உடல் எடை குறைக்க முயற்சி செய்றீங்களா? அப்போ இந்த உணவுகள் எல்லாம் சாப்பிடலாம்.! - Seithipunal
Seithipunal


நம் உடல் பருமனை கட்டுப்படுத்துவதற்கும் சீரான எடையை பராமரிப்பதற்கும் வளர்ச்சிதை மாற்றம் முக்கியமான காரணியாகும். வளர்ச்சிதை மாற்றம் என்பது  நாம் உட்கொண்ட ஜீரணமாகி அதில் இருக்கும் சத்துக்களை நமது செல்கள் உட்கிரகித்து கொள்வதாகும். உடலில் வளர்ச்சிதை மாற்றம் எனப்படும் மெட்டபாலிசம் அதிகமாக இருந்தால் நாம் எவ்வளவு உணவு எடுத்துக் கொண்டாலும் நமது உடல் எடை அதிகரிக்காது. மேலும் உணவும் எளிதில் ஜீரணமாகி நம் உடலுக்கு தேவையான சக்தியும் விரைவிலேயே  கிடைக்க உதவும். நம் உடலின் வளர்ச்சியை மாற்றத்தை அதிகரிக்க  உதவும் சில வழிமுறைகளை காணலாம்.

நம் உடலின் வளர்ச்சியை மாற்றத்தை அதிகரிக்க நமது வாழ்க்கை முறையிலும் உணவு முறையிலும் சில மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும். முதலாவதாக அதிக நேரம் உறங்க கூடாது. மேலும் பச்சை காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த முடியும்.

புரதச்சத்து நிறைந்த உணவுகள் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும். புரதச்சத்து அதிகம் நிறைந்த பால், பாலாடை கட்டி, இறைச்சி, மீன், முட்டை, கோழி போன்றவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் நம் உடலின் மெட்டபாலிசத்தில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

கிரீன் டீ மெட்டபாலிசத்தை அதிகரிப்பதற்கு மற்றும் ஒரு முக்கிய உணவாகும். இதில் இருக்கக்கூடிய ஆன்டி ஆக்சிடென்ட்கள் நம் உடலின் வளர்ச்சியை மாற்றத்தை தூண்டுகின்றன. மேலும் இது உடலில் இருக்கின்ற நற்செயல் வெளியேற்ற உதவுகிறது.

வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு மற்றும்  நெல்லிக்காய் போன்றவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு வளர்சிதை மாற்றத்தை தூண்டக்கூடிய முக்கிய உணவுப் பொருட்களாக இருக்கின்றன. இவற்றை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம்  உடலின் வளர்ச்சியை மாற்றம் அதிகரித்து  உடல் பருமன் குறைவதற்கு உதவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Foods that accelerate metabolism


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->