கணினியில் இருந்து நம் கண்களை பாதுகாக்க வேண்டுமா? - Seithipunal
Seithipunal


இன்று அனைத்துமே கம்ப்யூட்டர், ஸ்மார்ட் ஃபோன் என நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒன்றாகிவிட்டது. அதிலும் கணினி என்றதும் நமது நினைவிற்கு வருவது எல்லாவற்றையும் விட நமது கண்கள் தான். 

கணினியை கண் பார்வையில் இருந்து, 18 - 28 அடி தொலைவில் அமைத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் கம்ப்யூட்டர்கள் இருக்கும் அறைகள், ஏர் கண்டிஷன் செய்யப்படுவதால், ஏசி-யில் இருந்து வரும் காற்று, கண்ணுக்கு நேராக படும்படி உட்காரக்கூடாது.

உங்கள் கணினி ஸ்க்ரீனை தூசு மற்றும் கரை இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்களுக்கு தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

மிகப்பெரிய மற்றும் சிறிய பாண்ட்கள் (கழவெள) உங்கள் கண்களை எரிச்சலடைய செய்யலாம். எனவே உங்களுக்கு தகுந்தாற்போல் மாற்றிக்கொள்ளவும்.

கணினியில் முக்கியமான வேளைகளில் ஈடுபடும்போது கண்களை சிமிட்ட மறந்து விடுவதனால் உங்கள் கண்களில் வறட்சி ஏற்படுகிறது. இதை தடுக்க அடிக்கடி கண் சிமிட்டுங்கள்.

20 நிமிடங்களுக்கு ஒரு முறை 20 வினாடிகள் 20 அடி தொலைவில் உள்ள பொருட்களை பாருங்கள். இது உங்கள் கண்கள் சோர்வடைவதை தடுக்கும்.

கணினி பயன்படுத்தும் இடங்களில் முடிந்த வரை அதிகப்படியான வெளிச்சத்தை தவிர்க்க வேண்டும். போதுமான வெளிச்சம் இருக்க வேண்டும். அதே நேரம் கண்களை பாதிக்காத அளவு அவை இருக்க வேண்டும்.

ஒரே இடத்தில், நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வதால், உடல் இயற்கைக்கு மாறான நிலையில் வலுக்கட்டாயமாக அமைக்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், எழுந்து 20 அடிகள் எடுத்து வைத்துப் பின் திரும்ப பணியாற்ற வரவும்.

அதேப்போல மதிய உணவு இடைவேளையின் போது சாப்பிட்டுவிட்டு உடனடியாக கணினியின் முன் அமர்வதைவிட, சாப்பிட்ட பின் ஒரு 15 நிமிடம் அமரும் நாற்காலியிலேயே தளர்வாக அமர்ந்தபடி கண் மூடி இருப்பது, 15 நிமிடம் தூங்குவது கூட மிகவும் நல்லது. ஒரு நாளைக்கு தேவையான சக்தியை இந்த 15 நிமிட தூக்கத்தில் உடல் பெற்று விடும். அமர்ந்த படி தளர்வாக 15 நிமிடம் அமர்ந்திருந்தாலும் கூட நல்லது. இப்படி செய்வதால் மாலையிலும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

சாதாரணமாக கண்களால் எல்லாப் பொருளையும் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் எதையாவது உற்றுப் பார்க்கும் போதுதான் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. சிறிது நேரம் எந்தப் பொருளையும் உற்றுப் பார்க்காமல், எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பதும் நல்ல பயிற்சிதான்.

கணினியில் பணியாற்றுகையில் கண்களில் சோர்வு ஏற்பட்டால் அமர்ந்து பணியை தொடங்கும் முன்னரும், பின்னர் அவ்வப்போதும் கரங்கள் இரண்டையும் இணைத்து தேய்த்துக் கொள்ளுங்கள். இளஞ்சூடு பரவிய பின்னர் அதனை கண்களில் ஒத்தி வைத்து எடுங்கள். இது ஒரு இதமான சூட்டைக் கண்களுக்கு தரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

everyday sleep 15 minutes in office


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->