நீங்க ரொம்ப கம்மியா தூங்குறீங்களா.?! உஷார் இந்த ஆபத்து வரும்.! - Seithipunal
Seithipunal


இரவில் உறங்குவது ஒரு மனிதனுக்கு அடிப்படையான ஒன்றாகும். குறைந்தது ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு மணி நேரம் நம் வயதிற்கு ஏற்றார் போல் தூங்கிக் கொள்வது நம் உடலுக்கு நாம் செய்யும் கடமையாகும். இந்த தூக்கமானது குறைவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று பார்க்கலாம் .

நமது தூக்கத்தின் அளவு  குறைவது நீரிழிவு நோய் வர முக்கிய காரணமாக அமைகிறது. குறைவான அளவில் தூங்கும்போது நாம் விழித்திருக்கும் சமயம் கணையத்தின் செயல்பாடு அதிகமாகிறது. இதன் காரணமாக நாளடைவில் நம் உடலில் இயற்கையாக சுரக்கும் இன்சுலின் அளவு குறைகிறது .

தூக்கத்தின் அளவு குறைவதன் மற்றும் முக்கிய பாதிப்பாக இருப்பது உடல் எடை அதிகரிப்பாகும். ஆறு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்கள் உடல் எடையானது அதிகரிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. குறைவான தூக்கத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு இதய நோய் தாக்குவது அதிகமாக உள்ளது.மேலும், குறைவான தூக்கமானது, நம் உடலின் ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. 

நம் தேவைக்கும் குறைவான தூக்கத்தை பழக்கமாக கொண்டிருந்தால் அதுவும் மன அயற்சியை ஏற்படுத்தி மனநலம் சார்ந்த நோய்கள் வருவதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது. இரவு நேரத்தில் தூங்காமல் கண் விழித்திருப்பார்களும் மற்றும் குறைவான தூக்கத்தை கடைப்பிடிப்பவர்களுக்கும், ஆண்களுக்கு அதிக அளவிலான விரைப்பை புற்றுநோயும் மற்றும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தூக்க குறைபாடு உள்ளவர்களுக்கு சிந்திக்கும் ஆற்றலானது குறைவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதிக நேரம் கண் விழித்திருப்பதன் காரணமாக,  மனம் ஒரு அழுத்தமான சூழ்நிலையில் இருக்கிறது இதன் காரணமாக, அவர்களால் சரியாக சிந்தித்து முடிவெடுக்க முடியவில்லை என அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do you sleep well


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->