கெட்ட சக்தி ஒழிய துடைப்பத்தை எங்கே வைக்க வேண்டும் தெரியுமா?
Do you know where to put a broom to ward off bad energy
நம் வீட்டில் மகிழ்ச்சி, செல்வம் செழிக்க வேண்டும் என்றால் துடைப்பத்தை எப்போதும் வீட்டில் தெற்கு அல்லது தென்மேற்கு திசையில் வைக்கவேண்டும். இதில் வட கிழக்கில் துடைப்பம் வைப்பதை தவிர்க்க வேண்டும். எப்போதும் துடைப்ப முகம் கிழக்கு நோக்கி வைப்பது அதிக பலன்களைத் தரும்.மேலும் வீட்டில் பணத்தை மறைத்து வைப்பது போல துடைப்பத்தையும் எப்போதும் மறைத்து வைக்கவேண்டும்.

பழைய துடைப்பம் வீட்டில் இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் நிலவும். அதேபோல் தடைப்பத்தை தலைகீழாக நிற்க வைக்ககூடாது. அவ்வாறு வைத்தால் வீட்டில் எதிர்மறையான விளைவுகள் அதிகரிக்கும். வீட்டில் பணத்தை துடைத்துவிடும் என்கிறார்கள். துடைப்பத்தை எப்போதும் கால் படாத இடத்தில் படுத்த நிலையில் மறைத்தவாறு வைக்க வேண்டும் என்கின்றனர்.
எங்கு வைக்கலாம்:
வீட்டில் பாத்திரம் கழுவும் இடத்தின் அருகில் துடைப்படத்தை வைக்கலாம். அதேபோல் மின்சார பெட்டி இருக்கும் இடத்திற்கு அருகில் வைக்கலாம். அல்லது கழிவுநீர் செல்லும் வழி அமைந்திருக்கும் இடங்களில் வைக்கலாம் என்கிறது வாஸ்து சாஸ்திரம். வீடு கூட்ட பயன்படும் இந்த துடைப்பத்தை நினைத்த இடங்களில் வைக்காமல் வாஸ்து சாஸ்திரப்படி முறையான இடங்களில் வைத்துக்கொள்ளுங்கள்.
துடைப்பம் பெருக்கும் திசை:
துடைப்பத்தை வைக்கும் திசையைப்போல அதை பயன்படுத்தும் திசையும் முக்கியமானதாகும். வீட்டை நீங்கள் சுத்தம் செய்யும் போது முதலில் மேற்கு அல்லது வடக்கு திசையில் இருந்து துடைக்க தொடங்க வேண்டும். அதனால் உங்கள் வீட்டில் லட்சுமி தாங்குவதோடு லஷ்மியின் அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் . பெருக்கிய பின் குப்பைகளை குப்பை தொட்டியில் போட வேண்டும். குப்பைகளை ஆங்காங்கே குவித்து வைத்தால் உங்களின் வறுமையும் கஷ்டங்களும் அதிகரிக்கும்.வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்ற பின் பெருக்கக் கூடாது.
வீட்டில் உள்ளவர்கள் வெளியே போனவுடன் வீட்டை பெருக்கவும், துடைக்கவும் செய்யக்கூடாது. வெளியே சென்று சிறிது நேரம் கழித்து செய்யலாம்..புதிய துடைப்பம் வாங்க எல்லா நாட்களும் சிறந்த நாட்கள்தான். ஆனால் சனிக்கிழமை துடைப்பம் வாங்குவது இன்னும் நல்ல பலன்களை கொடுக்கும் என கூறப்படுகிறது. வியாழன் மற்றும் வெள்ளியில் விளக்குமாறு வாங்கக்கூடாது. துடைப்பம் சிறியதாக இருந்தால் அதை விரைவில் மாற்ற வேண்டும். துடைப்பம் நீளமாக இருந்தால் துடைப்பது எளிது.
துடைப்பம் வைக்கும்போது கவனிக்க வேண்டியவை:
துடைப்பத்தை எக்காரணம் கொண்டும் பூஜை அறையில் வைக்கக்கூடாது. கதவுக்கு அருகிலும் வைப்பது நல்லது அல்ல. துடைப்பத்தை எப்போதும் செங்குத்தாக வைக்காமல் கிடை மட்டமாக வைக்க வேண்டும். துடைப்பத்தின் மீது கால் படாமல் பார்த்துக்கொள்ளவும். கூரை அல்லது மொட்டை மாடியில் துடைப்பம் வைக்கக்கூடாது எப்போதுமே மறைத்து வைக்க வேண்டும்.தூய்மை செய்யும் துடைப்பத்திற்கு நாம் மரியாதை கொடுக்கிறோமோ? அதை எப்படி பராமரிக்கிறோம்! எங்கு வைக்கிறோம் என்பதும் முக்கியம்.
சுத்தம் செய்த பின் அதை முறையாக பராமரிப்பதும் அவசியம்.மேலும் ஒருவரது வீட்டில் உள்ள துடைப்பம் வேறு யாருக்கும் பயன்படுத்தக் கூடாது. துடைப்பத்தை வீட்டில் எந்த ஒரு கனமான பொருட்களின் கீழும் வைக்கக்கூடாது.அந்தி சாயும் முன் வீட்டை பெருக்கி சுத்தம் செய்தல் வேண்டும். துடைப்பத்தை தெரிந்தோ, தெரியாமலோ மிதிக்கக்கூடாது. துடைப்பத்தை ஒருபோதும் எரிக்கக் கூடாது. பழைய துடைப்பத்தை மாற்ற வேண்டுமென்றால் சனிக்கிழமைகளில் செய்வது நல்லது.துடைப்பம்தானே என்று எண்ணாமல், அதற்குரிய சரியான முறையில் பயன்படுத்தினால் வீட்டில் லஷ்மி கடாட்சம் உண்டாகும்.
English Summary
Do you know where to put a broom to ward off bad energy