பாடாய் படுத்தும் பாத வெடிப்புக்கு இதோ தீர்வு.!  - Seithipunal
Seithipunal


பாத வெடிப்பு என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை  எல்லோருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பாதிப்பாகும். நம் கால்களில் ஈரப்பதம் குறைவதனால்  மற்றும் வைட்டமின்கள்  குறைபாட்டினால் இந்த பாத வெடிப்பு உண்டாகிறது. இதன் காரணமாக நிறைய  அசௌகரியங்களுக்கு உள்ளாகிறோம்.

மேலும் இந்த வெடிப்புகளின் வழியாக  கிருமி தொற்று ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. நாம் அழகு நிலையம் சென்று அல்லது  மருந்துகளின் மூலம் தான்  இவற்றை குணப்படுத்த வேண்டும் என்று அவசியம் இல்லை. நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களை வைத்து பாத வெடிப்பை எவ்வாறு சரி செய்யலாம் என்று பார்ப்போம்.

ஒரு டப்பில்  வெந்நீர் எடுத்து அதில் கல் உப்பு போட்டு எலுமிச்சை சாறு கலந்து  சிறிது நேரம் நம் பாதங்களை அந்த நீரினுள் வைத்திருக்க வேண்டும். இது நம் பாதங்களில் படிந்திருக்கும் அழுக்குகளை வெளியேற்றுவதோடு கிருமி தொற்றுகளையும் அளிக்கக் கூடியது.

மருதாணி குளிர்ச்சி தன்மை கொண்டது மஞ்சள் கிருமி நாசினி. இவை இரண்டையும் நன்றாக அரைத்து  நம் பாதங்களில் தடவி வர பாத வெடிப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும்.

நாம் வீட்டில் பயன்படுத்தும்ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய். தேங்கெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தி நம் பாதங்களை மசாஜ் செய்வதன் மூலம் அவற்றின் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மேலும் இந்த எண்ணெயில் உள்ள மூலக்கூறுகளினால் கிருமித் தொற்று தடுக்கப்படுகிறது.

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருக்கிறது. இது கிருமிகளுக்கு எதிராக போராடும் தன்மை கொண்டது. வாழைப் பழத்தை நன்கு மசிய வைத்து நம் பாதங்களில் தடவி வர  பாத வெடிப்பில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்.

பாத வெடிப்பு இருப்பதை ஆரம்பகட்டத்திலேயே நாம் கவனித்தால் அதில் தேன் தடவி பார்க்கலாம்.  ஒரு வாரம் பாத வெடிப்பில் தேன் தடவி வர  நல்ல மாற்றம் கிடைக்கும். இதே பாதங்களை நன்கு  ஈரப்பதமாக வைத்திருக்கும். மேலும் தேனில் இருக்கக்கூடிய ஆன்ட்டி பாக்டரியல் பண்புகள் கிருமி தொற்றுகளை தடுக்கும் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

do this five things to get relief from cracked heels


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->