நெயில் பாலிசியில் இவ்வளவு தீமைகளா? - Seithipunal
Seithipunal


தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ள பல்வேறு அழகு சாதன பொருட்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். அதில் ஒன்று தான் நெயில் பாலிஷ். இதை பார்க்கும் பொது எவ்வளவு அழகாக இருக்கும் என்று தான் நாம் அறிந்திருப்போம். ஆனால், இது எந்த அளவில் உடலுக்கு தீமையை ஏற்படுத்துகிறது என்பதை குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்

நெயில் பாலிசியில் உள்ள இரசாயனங்கள் நம் உடலில் கலந்து தாயின் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு வயிற்றில் உள்ள குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு சிலர் குழந்தைகளுக்கும் நெயில் பாலிஷ் போடு்கின்றனர். 

குழந்தைகள் கையை வாயில் வைக்கும் போது அதில் உள்ள ரசாயனமான பார்மாலிடிகிடு, டிபூட்டல் பத்தாலேட் உள்ளிட்டவை உடலில் கலந்து பல்வேறு நோய்களை ஏற்படுத்துகிறது. இதனால், குழந்தைகளின் நலன் பாதிக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், தலைவலி, நுரையீரல் பாதிப்பு, புற்று நோய் பாதிப்பு, நகம் நிறம் மாறுதல், சுவாச கோளாறு போன்ற பல்வேறு பாதிப்புகள் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஏற்படும்.  அதிலும் குறிப்பாக இந்த நெயில் பாலிசியில் உள்ள பார்மாலிடிகைட் ரசாயனம் மூளையை பாதித்து மனம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cons of nail polish


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->