இந்த இடத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம் கொட்டும்.! மச்ச பலன்கள்.! - Seithipunal
Seithipunal


மச்சங்கள் நம் தோளில் கருப்பு அல்லது பிரவுன் நிறத்தில் இருக்கும் அடையாளங்கள். இவை பொதுவாக நம் உடலின் அடையாளக் குறிகளாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்து மதத்தின் சாமுத்திரிகா சாஸ்திரப்படி உடலில் மச்சங்கள் அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்து  அதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது.

மச்சங்கள் நம் நிதி நிலையை மட்டுமின்றி குணாதிசயங்களையும் கூறுகிறது. குறிப்பாக இந்து சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. எந்தெந்த இடங்களில் மச்சம் இருந்தால் என்னென்ன நன்மைகள் என்று பார்ப்போம்.

நம் இரு புருவங்களுக்கும் இடையில்  மச்சம் இருப்பவர்களுக்கு நிதிநிலை நன்றாக இருக்கும். மேலும்  இவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும், வீட்டில் எப்போதும் செல்வம் நிறைந்தும் காணப்படும்.

முதுகுப் பகுதியில் மச்சம் இருப்பது செல்வ வளத்தை குறிக்கிறது. மேலும், முதுகில் மச்சம் உள்ளவர்கள் ரொமான்டிக்கான ஆட்களாக இருப்பார்கள். அவர்கள் தங்களது காதலன், காதலிக்கு அதிக அளவில் செலவு செய்வார்கள். எவ்வளவு சம்பாதித்தாலும் அதனை விரைவாக செலவு செய்து விடுவார்கள்.

பொதுவாக வயிற்றில் மச்சம் இருப்பது அபசகுணமாகவே கருதப்பட்டாலும்  தொப்புளை சுற்றி மச்சம் இருந்தால், அவர்கள் செல்வத்தில் செழிப்பதோடு வாழ்க்கை முழுவதும் கஷ்டமே வராது என்று சொல்லப் படுகின்றது.

கால்களில் மச்சம் இருப்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளன. கால்களில் மச்சம் உள்ளவர்கள் ஒரு இடத்தில் இருக்க மாட்டார்கள். வெளிநாட்டுப் பயணங்கள் என சுற்றிக் கொண்டே இருப்பார்கள். கால் விரல்களில் மச்சம் இருப்பவர்கள் செல்வ செழிப்போடு தாராள மனம் படைத்தவர்களாகவும் இருப்பார்கள்.

வலது உள்ளங்கையில் மச்சம் இருப்பவர்கள் அவர்களுக்கும் அவர்களது வாழ்க்கை துணைக்கும் நல்ல செல்வத்தை கொடுக்கும். மேலும் இந்த இடத்தில் மச்சம் உள்ளவர்கள் அமைதியான நடத்தையோடும், தொலைநோக்கு பார்வை உடையவராகவும் இருப்பார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

black mole and its lucky charm


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->