வெயில் காலத்தில் நமது உடலை பாதுகாக்க.. இந்த ஒரு ஜூஸ் போதும்.!
Benefits of cucumber juice
தற்போது தமிழகத்தில் வெயில் காலம் தொடங்கி உள்ள நிலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதுபோன்ற வெயில் காலங்களில் இருந்து நமது உடலை பாதுகாப்பது எப்படி என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.
அந்த வகையில் வெயில் காலத்தில் நமது உடலை பாதுகாக்க நுங்கு, வெள்ளரிக்காய், அதிகளவு தண்ணீர் அருந்துதல் போன்றவற்றை மூலம் நமது உடலை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.
இதில், வெள்ளரிக்காயை ஜூஸ் போட்டு குடித்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என நமது முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் வெள்ளரிக்காயில் வைட்டமின் கே அதிக அளவில் இருப்பதால் தினம் ஒரு ஜூஸ் குடிப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.

சாதாரணமாக வெயில் காலங்களில் தண்ணீர் தாகம் அதிகம் இருக்கும். எனவே வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்தால் நீர்ச்சத்து அதிகம் கிடைப்பதோடு வைட்டமின் சி கிடைக்கும் அதே போல் வெள்ளரிக்காயில் பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஆகிய சத்துக்களும் தேவையான அளவு உடலுக்கு கிடைக்கிறது.
மேலும், நமது சருமம் மற்றும் கூந்தல் ஆகியவற்றை பராமரிக்க வெள்ளரிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும். கண்களை சுற்றி கருவளையத்தை போக்க வெள்ளரிக்காயில் அதிக அளவில் சத்துக்கள் உள்ளது.
English Summary
Benefits of cucumber juice