நாடி, நரம்புகளை முறுக்கேற்றி, உடல்நலத்தை பாதுகாக்கும் 3 மாத தியானம்.! - Seithipunal
Seithipunal


மனதை ஒருங்கிணைக்க எடுத்துக்கொள்ளப்படும் தியான பயிற்சியானது, தியானம் என்று சொல்லும் போதே அதன் பணியை துவங்கிவிடுகிறது. தியானம் என்ற சொல்லை உச்சரிக்கையில் காற்று நமது நாசியில் சீராக சென்று வருகிறது. மூச்சை உள்ளே இழுக்கும் போதும், வெளியே விடும் போதும் நிதானம் தேவை என்பதையும் இது உணர்த்துகிறது. தியானம் என்ற சொல்லை வாய்விட்டு சொல்லும் போது நுரையீரலில் பிராண வாயு நிரப்புகிறது. 

வயது, உடல் திறன், பக்குவம், உடல்நிலை போன்றவற்றுக்கு ஏற்றவாறு வெவ்வேறு விதமான ஒலிப்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இதனை சரியாக பின்பற்றினால் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். பத்மாசனத்தில் அமருவது, மனதை ஒருமுகப்படுத்துவது அனைவருக்கும் எளிதான காரியமல்ல. மனம் கட்டுப்பாடு இல்லாதது. மனதின் போக்கினை புரிந்துகொண்டு, அதனை கட்டுப்படுத்த முயற்சித்தால் அது தானாகவே பதுங்க தொடங்கிவிடும்.

மனசோர்வு வைத்தியம் செய்யும் நோயாளிகள் தியானம் என்ற சொல்லை உபயோகம் செய்து பலன் அடைந்துள்ளனர். தியான முறைகள் மனதிற்கும், உடலுக்கும் வலிமை தருகிறது. நரம்பு தளர்ச்சி நீங்குகிறது. உடலின் தசைகள் வலுப்பெறுகிறது. நினைவுத்திறன் அதிகரிக்கிறது. தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. மன உறுதி வலுவடைகிறது.

நமது உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் சிறப்பாக செயல்படுகிறது. மன இறுக்கம், சோர்வு, கனவுத்தொல்லை, அச்சம், உடல் வலி போன்ற பல நோய்கள் சரியாகிறது. தியானம் நம்மிடையே இருக்கும் திறமைகளை வெளிக்கொணர உதவி செய்கிறது. 3 மாதம் தொடர்ச்சியாக தியானம் செய்து வந்தால், நம்மை போல உடல்நலம் பெற்றவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று தான் கூற வேண்டும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yoga Meditation is good for Health Keep of 3 Month Tamil


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->