பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டியவை..!பெண்கள் மட்டும் பார்க்கவும்..! - Seithipunal
Seithipunal


வளர்த்து வரும் காலத்திலோ எத்தனை எத்தனை நோய்கள்..! குறிப்பாக புற்றுநோய் அதில் பலவகை புற்றுநோய்கள் பெண்களை பாதிக்குறது குறிப்பாக 40 வயது அடைந்த பின் கடும் வியாதிகள் உடனே நடமாட வேண்டியுள்ளது.

பெண்களின் வலி தாங்கும் திறன் என்பது ஆணை காட்டிலும் பலம் வாய்ந்தது. நான்கைந்து அறுவைச் சிகிச்சை செய்த பெண் அசால்ட்டாக அனைத்து வேலைகளையும் செய்வாள். அத்தனை வலிகளையும் பொறுத்துக்கொண்டு குடும்பத்தினர் அனைவரையும் கவனிப்பாள். அனால் ஆண்களோ இரண்டு நாள் காய்ச்சலுக்கே வீட்டை இரண்டாக மாற்றி அதகளம் பண்ணுவார்கள்.

நாற்பது வயதை எட்டிய பெண்கள் பெரும்பாலும் உடலும், மனமும் சோர்ந்து வியாதிகள் நிறைந்த கூட்டுடன் திரிவது தான் கொடுமை. பெண்களின் வாழ்க்கைச் சூழல் குழந்தைகளையும், கணவரையும் வெளிச்சத்தில் நடமாட மனைவியோ தன்னை மெழுகாக உருகி கொள்கிறாள். ஏழை வீட்டு மனைவியானாலும் பணக்கார வீட்டு மனைவியானாலும்  ஒரே விதமான மனஅழுத்தத்துடன் தான் இருப்பார்கள். இதனால் புலம்பி எதுவும் மாறப்போவதில்லை பெண்ணே!நமது ஆரோக்கியம் நமது கையில் தான் உள்ளது நம்மை நாமே கவனித்து கொள்வது தான் புத்திசாலிதனம். 
 
எனவே பெண்கள் இதை முன்னரே அறிந்து கவனமாக இருப்பது அவசியம் கீழே குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதேனும் தோன்றினால் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.

மார்பகத்தில் எதாவுது வித்தியாசமான மாற்றம், ஆரஞ்சு பழத்தோல் போல சொரசொரப்பாக இருப்பது, நிப்பிள் இருந்து திடீர் இரத்தம் போல் வடிவது, வலி இல்லாமல் தோன்றும் கட்டிகள், திடீர் வீக்கம், மெனோபாஸ்க்கு பிறகு ஏற்படும் இரத்தப் போக்கு.

உடலுறவுக்கு பின் ஏற்படும் இரத்தப்போக்கு, மலம், சிறுநீரில் இரத்தத்திட்டுக்கள் வெளிப்படுவது, விடாத இருமல், தொடர்காய்ச்சல், திடீரென எடைக்குறைவு, பசியின்மை, அடிவயிற்றில் வலி, கழுத்து, அக்குள், கை மடிப்பில் உள்ள தோலில் திட்டுக்கள் (skin bruises), மச்சத்தில் ஏதேனும் மாற்றங்கள், தொடர் சோர்வு.

இதில் எந்த ஒரு சிறு மாற்றங்களையும் அலட்சியம் படுத்தாமல் உடனே மார்பக பரிசோதனை செய்துகொள்ளுங்கள். பெண்கள் கண்டிப்பாக பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை மார்பக சுயப்பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women must do this


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->