பெண்கள் அவசியம் இதெல்லாம் வைத்துக் கொள்ளுங்கள்.. கைப்பையில் இருக்க வேண்டியவை, இருக்கக்கூடாதவை.! - Seithipunal
Seithipunal


பெண்கள் வீட்டிலேயே இருந்து குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனித்துக்கொண்ட காலம் மாறிவிட்டது.

இன்று பெரும்பாலான குடும்பங்களில் தங்கள் பொருளாதார நிலையை சமாளிக்க, தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்வது சாதாரணமான நிகழ்வாக மாறிவிட்டது.

அதனால் படித்து முடித்த உடனே பெண்கள் வேலைக்கு சென்று சம்பாதிக்க முன்வருகிறார்கள்.

பெண்களின் கைப்பையில் அவசியம் இருக்க வேண்டிய பொருட்கள் :

பெண்கள் தினந்தோறும், பேருந்து அல்லது ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால் பயண அடையாள அட்டையை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். 

வாகனம் ஓட்டுபவராக இருந்தால் ஓட்டுனர் உரிமம் நிரந்தரமாக கைப்பையில் வைத்திருக்க வேண்டும். கைப்பை தொலைந்து போகக்கூடும் என்பதால், அடையாள அட்டைகளின் நகலை மட்டும் வைத்திருக்கவும்.

எப்போதும் ஒரு பேனா மற்றும் சில்லறை வைத்திருப்பது நல்லது. பெண்கள் கைப்பையில் கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பரும் எடுத்துச் செல்லலாம்.

நாம் வெளியில் செல்லும்போது அலைப்பேசியில் சார்ஜ் தீர்ந்து போனால் அல்லது அலைப்பேசி தொலைந்து போனால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் போகும். எனவே, அவசரத்திற்கு உதவுவதற்கு, மிக முக்கியமான நபர்களின் எண்களை மட்டும் சிறிய அளவு குறிப்பேட்டில் குறித்து கைப்பையில் வைத்துக் கொள்ளலாம்.

உங்கள் வீட்டு பெண்களை நீங்கள் மேலும் ஊக்குவிக்க விரும்புகிறீர்களா? கோலம், மெஹந்தி, சமையல், வீடு பராமரிப்பு என அனைத்திலும் பெண்கள் அசத்த வேண்டுமா? இதோ உங்களுக்காக பிரத்யேகமாக உருவக்கப்பட்ட செயலி மகளிர் மட்டும்.

இது பெண்களை ஊக்குவிப்பதற்கு மட்டுமல்ல பெண்களை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
பெண்கள் பாதுகாப்பிற்கு கவர் செய்யப்பட்ட சிறிய கத்தி மற்றும் பெப்பர் ஸ்ப்ரே ஆகியவற்றை கைப்பையில் எடுத்துச் செல்லலாம்.

இருக்கக்கூடாதவை :

விசிட்டிங் கார்டுகளை அதிக அளவில் கைப்பையில் வைத்திருக்காமல் தேவைக்கு வேண்டிய கார்டுகளை மட்டும் வைத்துக் கொள்ளவும்.

உணவுப் பொருட்கள் மற்றும் அதிக அளவில் வாட்டர் பாட்டில் என வைத்து எடையை அதிகரிக்க வேண்டாம். இதனால் கைப்பை சீக்கரமாக கிழிந்துவிடும்.

பேருந்து பயணச்சீட்டு, குறிப்பெடுத்த காகிதங்கள், கடைகளில் வாங்கிய ரசீது என தேவைப்படாதவற்றை சேர்த்து வைக்காமல் குறைந்தபட்சம் வாரம் ஒருமுறை கைப்பையை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.

மேலும், பேனாவை மூடியில்லாமல் வைக்காதீர்கள், அவ்வாறு வைத்தால் பேனா முனையில் உள்ள மை கசிந்து கைப்பை பாழாகிவிடும். அதிக மேக்கப் சாதனங்களை வைத்திருக்க வேண்டாம்.

மேலும், அதிக அளவு சில்லறைகளை எடுத்து செல்லாமல் தேவைக்கேற்ப வைத்திருங்கள். இல்லை என்றால் கைப்பையின் எடை அதிகரிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women handbag products


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->