அந்த நாட்களுக்கான எளிய டிப்ஸ்..! - Seithipunal
Seithipunal


மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்ய வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் குறித்து நாப்கின் டெலிவரி செய்யும் கவர்களில் சங்கிராணி என்ற பெண்மணி அச்சிட்டு வழங்கி வருகிறார். இவர் பதிவு செய்துள்ள சில குறிப்புக்கள் பெண்களுக்காக, 

மாதவிடாய் நாட்களில் பழங்கள் மற்றும் காய்கறிகளை வழக்கத்தை காட்டிலும் அதிகளவு சாப்பிடுங்கள். இது உடலின் ஆற்றல் திறனை அதிகரித்து, உடல் நலனை பாதுகாக்கிறது. 

உடலின் நீர்சத்து அளவை பராமரிப்பது முக்கியம். இதனால் அதிகளவு நீர் பருக வேண்டும். இது வலியை குறையும். இடுப்பு பகுதிக்கு செல்லும் இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும். 

சாக்லேட்டில் டார்க் சாக்லேட் சாப்பிடலாம். இது பசியை கட்டுக்குள் வைத்து, மனநிலைக்கு நல்ல மாற்றத்தை அளிக்கும். மாதவிடாய் நாட்களில் பேரிச்சம்பழம் தவறாமல் சாப்பிட வேண்டும். பேரீச்சம்பழத்தில் இருக்கும் இரும்பு சத்து, மாதவிடாயில் ஏற்படும் இரத்த இழப்பை ஈடு செய்கிறது. 

மாதவிடாய் நாட்களில் உடலின் சுத்தத்தை பராமரிக்க வேண்டும். நாப்கினை அதிகபட்சம் 6 மணிநேரத்திற்குள் மாற்ற வேண்டும். 4 மணிநேரத்திற்கு ஒரு முறை நாப்கினை மாற்றுவது நல்லது. மாதவிடாய் கப்கள் போன்றவை உபயோகம் செய்தால் 2 முதல் 3 மணிநேரத்திற்குள் மாற்ற வேண்டும். 

மாதவிடாய் நாட்களில் தினமும் இரண்டு வேலை குளிப்பது வலியை குறையும். மனநிலையை மேம்படுத்தும். இயல்பான நாட்களில் செய்யும் உடற்பயிற்சியை செய்ய வேண்டும். குறைந்த பட்சம் நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். 

துரித உணவுகள், உப்பு சேர்க்கப்பட்ட சிப்ஸ்கள் போன்றவற்றை சாப்பிட கூடாது. இவை உடலின் திரவ இருப்பை அதிகரிக்க செய்யும். காபின் கலந்த பானத்தை குடிக்க வேண்டாம். இது வலியை அதிகரிக்கும்.  உடலில் ஈஸ்டிரோஜன் குறைவாக இருக்கும் பெண்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Periods or Menstruation Day Tips 16 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->