முதல் குழந்தையை பெற்றெடுத்து., இரண்டாவது குழந்தைக்கு தேவையான கால அவகாசம் எவ்வுளவு? எதற்காக?..!! - Seithipunal
Seithipunal


பொதுவாக இன்றுள்ள தம்பதியினர் பெரும்பாலும் அதிகளவு குழந்தைகளை விரும்புபவர்களும் உண்டு... சில காரணத்திற்க்காக குழந்தை பிறப்பை தள்ளிவைக்கும் தம்பதிகளும் உள்ளனர். இவர்களில் குழந்தையின் மீது அலாதி பிரியம் கொண்ட தம்பதியினர் வீட்டில் மழலை செல்வம் விளையாட வேண்டும் என்று எண்ணுபவர்கள்., அடுத்தடுத்த குழந்தைகள் பெற்றெடுக்க தயாராவதும்., பெற்றெடுப்பதும் வழக்கமான ஒன்றுதான். 

அந்த வகையில்., முதல் குழந்தை பிறந்ததற்கு அடுத்தபடியாக குழந்தைக்கு தேவையான இடைவெளி என்ன? இது எதற்காக? என்பதையும் அறியவேண்டியது அவசியமான ஒன்றாகும். பொதுவாக முதல் பிரசவத்தின் போது பிறப்புறுப்பில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகள் ஆறுவதற்கும்., கர்ப்பப்பை தனது இயல்பான நிலைக்கு வரவும்., குழந்தையை பெற்றெடுத்த பெண்ணின் உடல் மற்றும் மனது வலிமை பெறவும் காலம் எடுத்துக்கொள்ளும். 

pregnant lady, pregnant, pregnancy, கர்ப்பிணி பெண், கர்ப்பிணி,

குழந்தையை பெற்றெடுத்த பெண்ணின் முதல் பிரசவம் அறுவை சிகிச்சை முறையாக இருப்பின்., குறைந்தபட்சம் ஆறு மாத காலம் அடுத்த குழந்தைக்கு தயாராகாமல் இருக்க வேண்டும். அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட புண்கள் ஆறுவதற்கு மட்டுமே குறைந்தபட்சமாக மூன்று மாதங்கள் ஆகலாம். இந்த சமயத்தில் எத்துனை வலிகள் இருந்தாலும் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டியதும் அவசியமான ஒன்றாகும். 

குழந்தைக்கு குறைந்த பட்சம் ஆறு மாத காலமாவது தாய்ப்பால் ஊட்ட வேண்டும். முதல் குழந்தையை பெற்றெடுத்த பின்னர் - இரண்டாம் குழந்தைக்கு தயாராக வருட இடைவெளி சாலச்சிறந்தது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும்., இயற்கையான முறையில் சுகப்பிரசவம் மூலம் குழந்தையை பெற்றெடுத்தால்., ஒரு வருட இடைவெளி என்பது கட்டாயம் அவசியம் என்றும் தெரிவிக்கின்றனர். 

baby in mother stomach, தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தை,

பிரசவ நேரத்தில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் உடலின் சோர்வு என்று உடலும் - மனதும் சார்ந்த விஷயமாக இருப்பதாலும்., குறைந்தபட்சம் ஒரு வருடம் முதல் ஒன்றரை வருடம் அடுத்த குழந்தைக்கு இடைவெளி விடுவது நல்லது. மேலும்., உடலுக்கு சத்துக்களை வழங்கும் உணவுகளை அதிகளவு உண்ணும் பட்சத்திலேயே இழந்த சக்தியை பெறவும் முடியும்., அடுத்த குழந்தைக்கு அதுவே சரியான ஆரோக்கியதிற்கும் வழிவகை செய்யும். 

இந்த சமயத்தில்., அனைவருக்கும் இத்தனை கால இடைவெளி ஏன் என்ற சந்தேகமும் எழும்... முதல் பிரசவத்துக்கும் - இரண்டாவது குழந்தை கருத்தரிப்பிற்கும் சரியான கால அவகாசத்தை வழங்காத பட்சத்தில்., உடல் நலக்குறைபாடு மற்றும் அடுத்ததாக வளரும் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் சரிவர கிடைக்காமல் இருப்பது போன்ற பிரச்சனை ஏற்படும். 

இதனால் குழந்தைக்கு நஞ்சுக்கொடி சுற்றல்., நஞ்சு கொடி குறுக்கீடு போன்ற பிரச்சனையும்., முதல் குழந்தையை கவனிக்க இயலாத சோகமும்., உடல் மற்றும் மனம் ஒத்துழைக்காத நிலையில்., மனநலம் சார்ந்த பிரச்சனையும் ஏற்படும். சரியான திட்டமிடலுடன் இரண்டு குழந்தைகளை பெற்றெடுக்கும் பட்சத்தில் ஆரோக்கியத்துடன் கூடிய மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம். மேலும்., பிரசவத்திற்கு பின்னர் குழந்தைக்கு ஊட்டப்படும் தாய்ப்பாலில் ஊட்டச்சத்துக்கள் முதல் குழந்தையால் உறிஞ்சப்பட்டு இருக்கும். 

இந்த ஊட்டச்சத்துக்கள் மீண்டும் கிடைப்பதற்கு தேவையான கால அவகாசம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும். இதனை சரியாக கடைபிடித்தால் இரண்டாவது குழந்தையும் ஆரோக்கியத்துடன் இருக்கும். மேலும்., இரண்டு குழந்தைக்கு உள்ள கால அவகாசம் குறைந்தால் குறை பிரசவம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும்., முதல் குழந்தையாக இருப்பினும் - இரண்டாவது குழந்தையாக இருப்பினும்., 35 வயதிற்கு மேல் குழந்தையை பெற்றெடுக்க விரும்பும் நபர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. 

உங்களின் ஆசைக்காகவோ அல்லது உங்களின் கணவர் ஆசைக்கவோ அடுத்தடுத்து தொடர் குழந்தைகளுக்கு தயாராகிவிடாதீர்கள். சரியான இடைவெளியில் தேவையான குழந்தை செல்வங்களை பெற்றெடுத்து மகிழ்ச்சியுடன் வாழுங்கள். தேவையற்ற வற்புறுத்தல் மனைவியின் உயிருக்கு மட்டுமல்லாது., அவரின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் ஆபத்தாக முடிய வாய்ப்புள்ளது என்பதை அறிந்து செயல்படுங்கள்.. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

what is the year difference for after delivery first baby to pregnant second baby


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->