டேஸ்டியான மாலை நேர ஸ்நாக்ஸ் "பச்சை பட்டாணி வடை"..! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


மிகவும் சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் பச்சை பட்டாணி வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

பச்சை பட்டாணி - 250 கிராம்

கடலைப் பருப்பு - 50 கிராம்

வெங்காயம் - 1

பெருங்காயத்தூள் - சிறிதளவு 

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - சிறிதளவு

கறிவேப்பிலை

கொத்தமல்லி

செய்முறை:

முதலில் பச்சை பட்டாணி, கடலைப்பருப்பு, ஆகியவற்றை 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு வெங்காயம், பச்சை மிளகாய் இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பிறகு ஊற வைத்த கடலை பருப்பு, பச்சை பட்டாணி, உப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும். 

பின்பு அரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்த மாவை வடைகளாகத் தட்டி போட்டு வேகவைத்து எடுத்தால் சுவையான பச்சை பட்டாணி வடை ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasty evening snacks Green Pea Vada


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->