டேஸ்டியான செட்டிநாடு மட்டன் உப்பு கறி.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


டேஸ்டியான செட்டிநாடு மட்டன் உப்பு கறி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத மட்டன் - 400 கிராம் 

சின்ன வெங்காயம் - 20 

பூண்டு இஞ்சி - சிறிதளவு

வரமிளகாய் - 10 

தக்காளி - 1 

சோம்பு - 1/2 டீ ஸ்பூன்

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை 

 உப்பு  

செய்முறை:

முதலில் வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சியை, பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்துகொள்ளவும். பிறகு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு தாளித்து, இஞ்சி, பூண்டு, பாதி வெங்காயம், பாதி மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். 

பிறகு அதில் மட்டன் துண்டுகளை சேர்த்து, அதோடு, தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு தூவி பிரட்டி விட வேண்டும். மட்டனின் நிறம் சற்று மாற தொடங்கும் போது, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின்பு அடுப்பில் கடாயை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் மீதமுள்ள வரமிளகாயை சேர்த்து லேசாக வதக்கிய பின் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, சிறிது உப்பு தூவி வெங்காயம் நன்கு வதக்க வேண்டும். 

பிறகு குக்கரில் வேகவைத்த மட்டனை கடாயில் சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை நன்கு வதக்கி இறக்கினால், டேஸ்டியான செட்டிநாடு உப்பு கறி ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasty Chettinad mutton uppu kari


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->