தலைமுறைகளை கடந்தும் தொடரும் சுவை…! - Draniki Belarus சமையலின் அடையாளம்...!
taste that continues through generations Draniki hallmark Belarusian cuisine
Draniki என்பது Belarus நாட்டின் மிகவும் பிரபலமான பாரம்பரிய உணவாகும். இது உருளைக்கிழங்கை துருவி, வெங்காயம் மற்றும் மாவுடன் கலந்து அடை போல சுட்டு தயாரிக்கப்படுகிறது. வெளிப்புறம் மொறுமொறுப்பாகவும் உள்ளே மென்மையாகவும் இருக்கும் இந்த உணவு, காலை உணவு, சிற்றுண்டி அல்லது முக்கிய உணவாகவும் சாப்பிடப்படுகிறது.Belarus மக்களிடையே Draniki ஒரு உணவைத் தாண்டி பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
தேவையான பொருட்கள் (Ingredients)
உருளைக்கிழங்கு – 4
வெங்காயம் – 1
மைதா அல்லது கோதுமை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
முட்டை – 1
உப்பு – தேவையான அளவு
மிளகு தூள் – ½ டீஸ்பூன்
எண்ணெய் – சுடுவதற்கு

செய்முறை (Preparation Method)
உருளைக்கிழங்கை தோல் நீக்கி நன்றாக துருவிக்கொள்ளவும்.
வெங்காயத்தையும் பொடியாக துருவி சேர்க்கவும்.
இதில் முட்டை, மாவு, உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
கலவையை சிறு அடைகளாக ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக சுடவும்.
மொறுமொறுப்பாக வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.
சிறப்பு என்ன?
Draniki-யின் முக்கிய சிறப்பு அதன் எளிமை மற்றும் அசத்தலான சுவை. குறைந்த பொருட்களிலேயே தயாரிக்கப்படுவதால் வீடுகளில் மிகவும் பிரபலமானது. பொதுவாக Sour Cream அல்லது தயிருடன் சேர்த்து சாப்பிடப்படுகிறது. வெளியில் குருமுறுப்பும் உள்ளே மென்மையும் இருப்பதே இதன் சிறப்பு.
English Summary
taste that continues through generations Draniki hallmark Belarusian cuisine