சண்டே ஸ்பெஷல்.., இறால் குழம்பு..!  - Seithipunal
Seithipunal


குழந்தைகள் இறால் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது இந்த இறால் வைத்து சுவையான இறால் குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள் :

இறால் - அரை கிலோ
காய்ந்த மிளகாய் - 8
தேங்காய் - அரை மூடி (துருவிக் கொள்ளவும்)
சின்ன வெங்காயம் - 100 கிராம் (நறுக்கிக் கொள்ளவும்)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 3 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சைப்பழம் - 1
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை :

முதலில் 4 காய்ந்த மிளகாய், தேங்காய் மற்றும் ஒரு டீஸ்பூன் சீரகத்தை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் மீதியுள்ள சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, அரைத்த மசாலா சேர்த்துப் பச்சை வாசனைப் போக வதக்கவும். 

கடைசியாக அதனுடன் மஞ்சள் தூள், இறால், தேவையான அளவு தண்ணீர், சிறிதளவு உப்பு போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும். இறால் வெந்ததும் எலுமிச்சைச் சாறு பிழிந்து இறக்கி, மூடி வைத்து பிறகு பரிமாறினால், சுவையான இறால் குழம்பு தயார்..!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prawn kolambu recipe in tamil


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->