ஆரோக்கியமான 'முடக்கத்தான் கீரை பக்கோடா' ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க.!
Mutakathan keerai pakoda recipe in tamil
ஆரோக்கியம் நிறைந்த சுவையான முடக்கத்தான் கீரை பக்கோடா எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
முடக்கத்தான் கீரை
அரிசி மாவு
கடலை மாவு
மிளகாய்த்தூள்
சீரகத்தூள்
மஞ்சள் தூள்
சோம்பு
உப்பு
எண்ணெய்
பெருங்காயம்
செய்முறை:
முதலில் முடக்கத்தான் கீரையை நன்றாக சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகதூள், சோம்பு, பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள முடக்கத்தான் கீரையை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்துள்ள மாவை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான சத்து நிறைந்த முடக்கத்தான் கீரை பக்கோடா தயார்.
English Summary
Mutakathan keerai pakoda recipe in tamil