அருமையான முள்ளங்கிபால் கூட்டு.! சுவையாக செய்து இப்போதே சாப்பிடுங்க.!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்: 

பால் -1 டம்ளர்
முள்ளங்கி – 3
நெய், உப்பு - தேவையான அளவு
தேங்காய்ப் பால் - கால் டம்ளர்

அரைக்க: 

தேங்காய்த் துருவல் – 3 டீஸ்பூன்.
கசகசா - கால் டீஸ்பூன், 
பச்சை மிளகாய் – 3, 
சீரகம் - அரை டீஸ்பூன், 
முந்திரிப் பருப்பு – 6, 

தாளிக்க: 

கறிவேப்பிலை, 
உளுத்தம் பருப்பு, 
கடுகு, 
மல்லித் தழை – சிறிதளவு

செய்முறை: 

முள்ளங்கியை நன்றாக தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளுங்கள். 

பின்னர் முள்ளங்கியைத் தண்ணீர் சேர்த்த பாலில் உப்பு கலந்து வேகவைத்து எடுத்து க்கொள்ளுங்கள். 

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள். 

வாணலியில் நெய் சேர்த்து, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை உள்ளிட்டவற்றை போட்டுத் தாளியுங்கள். 

பின்னர் வேகவைத்துள்ள முள்ளங்கியை அதில் கொட்டி வதக்கி, கொஞ்சம் தண்ணீர் விற்று பச்சை வாசனை போகுமாறு கொதிக்க வைத்து உப்பு சேர்த்து, கெட்டியான பின்னர் இறக்கி, தேங்காய்ப் பால் சேர்த்துப் பரிமாறுங்கள். 

பலருக்கு முள்ளங்கி பிடிக்காது. இந்தப் பால் கூட்டில் முள்ளங்கி வாடை சுத்தமாக இருக்காது. இதனை சப்பாத்தி, நாண் போன்றவற்றுக்கு பயன்படுத்தலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mullangi paal koottu preparation in tamil 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->