சுவையான 'மீல் மேக்கர் ஃப்ரை' ஒருமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க.!  - Seithipunal
Seithipunal


சுவையான மீல்மேக்கர் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 
மீல்மேக்கர் 
மிளகாய் தூள் 
இஞ்சி பூண்டு விழுது 
பெருஞ்சீரகம் 
உப்பு 
சோள மாவு 
எண்ணெய் 

செய்முறை:
முதலில் மீல்மேக்கரை அரை மணி நேரம் தண்ணீரில் நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு தண்ணீர் இல்லாமல் நன்றாக பிழிந்து எடுத்துக் கொள்ளவும். 

அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், பெருஞ்சீரகம், தேவையான அளவு உப்பு,சோள மாவு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

பிறகு மசாலா தடவிய மீல்மேக்கரை 10 நிமிடம் நன்றாக ஊற வைக்கவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீல்மேக்கரை போட்டு இருபுறமும் நன்றாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மீல் மேக்கர் ஃப்ரை தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Meal Maker Fry recipe tamil


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->