மாம்பழத்தில் மோர் குழம்பு செய்திருக்கிறீர்களா.. அப்போ சூப்பர் ரெசிபி இதோ..! - Seithipunal
Seithipunal


மோர்குழம்பை சாதாரணமாக செய்திருப்போம் ஆனால் மாம்பழத்தில் சுவையான மோர்குழம்பு எப்படி செய்வது என பார்போம்.

தேவையானவை:

இனிப்பான மாம்பழங்கள் – 2

புளித்த மோர் – 2 கப்

அரிசி – ஒரு டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

கடுகு – அரை டீஸ்பூன்

வெந்தயம் – கால் டீஸ்பூன்

பச்சை மிளகாய் – ஒன்று

காய்ந்த மிளகாய் – 2

தேங்காய் துருவல் – ஒரு கப்

தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் மாங்காய்களை கழுவி நறுக்கி கொள்ளுங்கள்.அதன் பின்னர் புளித்த மோரை மிக்சியிலோ அல்லது கரண்டியிலோ நன்றாக  கலக்கி எடுத்துக்கொள்ளவும். தேங்காய் துருவல், அரிசி, சீரகம், ஒரு காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் ஆகிவற்றையும் எடுத்து மையாக அரைத்து விழுதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அரைத்த விழுதை மோரில் கலந்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வேக வைத்த மாம்பழங்களுடன் கலக்க வேண்டும். தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து மீண்டும் கொதிக்கவிட வேண்டும்.

நன்றாக மோர் குழம்பு கொதித்த பின்னர், தாளிக்கும் கரண்டியில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், ஒரு காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து  இறக்க வேண்டும். இப்போது ருசியான மோர் குழம்பு ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mambaza Morkuzhambu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->