சுவையான ஆரோக்கியமான ''கொண்டைக்கடலை கட்லெட்'': ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்...!  - Seithipunal
Seithipunal


கொண்டைக்கடலையில் புரதம், நார் சத்து, கொழுப்பு இரும்பு சத்து மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். 

பெரும்பாலான குழந்தைகள் இதனை விரும்பி சாப்பிடுவது கிடையாது. இதை குழந்தைகளுக்கு பிடித்த உணவான கட்லட் ஆக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். 

தேவையான பொருட்கள்: 
கொண்டைக்கடலை 
அரிசி மாவு 
மஞ்சள் தூள் 
சீரகத்தூள் 
மிளகாய் தூள் 
உப்பு 
எலுமிச்சை சாறு 
பெரிய வெங்காயம் 
பச்சை மிளகாய் 
கறிவேப்பிலை, கொத்தமல்லி 
எண்ணெய் 

செய்முறை: 
முதலில் கொண்டைக்கடலையை இரவு முழுவதும் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து காலை அதனை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். 

பின் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்றவற்றை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். 

வேகவைத்த கொண்டைக்கடலையை மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு பவுளில் அரைத்த கொண்டைக்கடலை நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரிசி மாவு தேவையான அளவு உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். 

தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கட்லெட்டை சேர்த்து இரண்டு பக்கமும் நன்றாக வேக வைக்கவும். அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான கொண்டைக்கடலை கட்லெட் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kontaikatalai katlet recipe


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




சினிமா

Seithipunal
--> -->