செரிமானத்தை ஊக்குவிக்கும் வாழைத்தண்டு துவையல்.. செய்வது எப்படி?..! - Seithipunal
Seithipunal


வயிற்றில் உள்ள கொழுப்புகள் குறைய, சிறிதளவு வாழைத்தண்டு சாறுடன் இஞ்சியை சேர்த்து குடிக்க வேண்டும். இது செரிமானத்தை எளிதாக்குகிறது. வாழைத்தண்டு துவையல் செய்வது எப்படி என இனி காணலாம். 

வாழைத்தண்டு துவையல் செய்ய தேவையான பொருட்கள்: 

வாழைத்தண்டு - சிறிய துண்டு,
தேங்காய் - 1,
தனியா - கால் கரண்டி,
கடலை பருப்பு - ஒரு கரண்டி,
உளுத்தம் பருப்பு - ஒரு கரண்டி,
காய்ந்த மிளகாய் - இரண்டு,

பூண்டு - நான்கு பற்கள்,
புளி - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு,
கடுகு - சிறிதளவு,
நல்லெண்ணெய் - ஒரு கரண்டி.

வாழைத்தண்டு துவையல் செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட தேங்காயை துருவி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வாழைத்தண்டை பொடிப்பொடியாக நறுக்க வேண்டும். அடுப்பை கடாயில் வைத்து எண்ணெய் ஊற்றி, உளுந்தம்பருப்பு மற்றும் கடலைப்பருப்பை சேர்த்து வறுத்ததும் தனியாவை சேர்த்து வருக வேண்டும்.

பின்னர் சிறுசிறுதுண்டுகளாக நறுக்கிய வாழைத்தண்டை சேர்த்து, பச்சையான வாசம் போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். இதன்பின்னர் தேங்காய் துருவல், புளி, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி சூடு குறைந்த பின்னர் உப்பு மற்றும் பூண்டு சேர்த்து அரைத்து, கடுகு உளுந்து சேர்த்து தாளித்தால் வாழைத்தண்டு துவையல் தயார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to Prepare Valaithandu Thovayal Health Tips Tamil


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->