குட்டீஸ் ஸ்பெஷல்.,சோயா ரைஸ்.! செய்வது எப்படி.! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் : 

சோயா உருண்டைகள் - அரை கப், 
பச்சரிசி - 2 கப், 
இஞ்சி,பூண்டு விழுது - 2 டீஸ்பூன், 
பெரிய வெங்காயம் - 2, 
தயிர் - அரை கப்,
மிளகாய்த் தூள் - 4 டீஸ்பூன், 
சீரகம் - அரை டீஸ்பூன், 
கரம் மசாலாத் தூள் - 1 டீஸ்பூன், 
உப்பு - தேவைக்கு,
எண்ணெய், நெய் - தலா 2 டேபிள் ஸ்பூன்.

சோயா சாதம், soya rice

செய்முறை: 

சோயாவை ஐந்து நிமிடம் கொதி நீரில் ஊற வைத்து, பின்னர் பச்சைத் தண்ணீரில் இரண்டு, மூன்று முறை நன்றாகக் கழுவி எடுத்து கொள்ளவும். வெங்காயத்தை நீளம், நீளமாக மெலிதாக நறுக்கி கொள்ளவும். 

குக்கரை அடுப்பில் வைத்து அதில், நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி சூடான பின்னர், அதில் சீரகம் போட்டு தாளித்து அதில், வெங்காயத்தை சேர்த்து வதக்கி கொள்ளவும்.  

லேசாக, வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாடை போக நன்றாக வதக்குங்கள். பின்னர், சோயா  உப்பு, தயிர், மிளகாய்த் தூள், கரம் மசாலா உள்ளிட்டவற்றை சேர்த்து சற்று நேரம் கொதிக்க வையுங்கள். 

கொதித்தவுடன் அரிசி மற்றும் நான்கு கப் தண்ணீர் போன்றவற்றை சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் தீயை லேசாக வைத்து, 10 நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்குங்கள்.

சுவையான சோயா சாதம் ரெடி.!!  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare soya rice in tamil


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->