இரும்பு சத்துமிக்க பேரிச்சம்பழம் பாயசம்.!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:

கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் - 20
முந்திரி மற்றும் பாதாம் - 10
பால் - 2½ கப்
நெய் - 1 தேக்கரண்டி.

செய்முறை :

பேரீச்சம் பழத்தை நன்றாக கழுவி ½ கப் பாலில் ஊற வைத்து கொள்ளவும். 

அரை மணி நேரத்திற்கு பின்னர் பழத்தை பாலுடன் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

அடிகனமான பாத்திரத்தில் 2 கப் பாலை ஊற்றி பாதியாக சுண்டும் அளவிற்கு காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.

அரைத்த பேரிச்சை கலவையை எடுத்து காய்ச்சிய பாலில் சேர்த்து லேசாக சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். இதே நேரத்தில் 1 தேக்கரண்டி நெய் விட்டு முந்திரி, பாதாம் அல்லது தேங்காய் சீவல்களை சிவக்க வறுத்து பாலில் சேர்க்கவும்.

சர்க்கரையோ வெல்லமோ இதற்கு சேர்க்க வேண்டிய அவசியமில்லை.

சூப்பரான பேரீச்சம்பழ பாயாசம் ரெடி.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare perichampazham payasam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->