மூட்டு வலியை குணப்படுத்தும்., முடக்கத்தான் ரசம்.! - Seithipunal
Seithipunal


மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெற வல்லமைப் பெற்றது முடக்கத்தான் கீரை. இப்போது இந்த கீரையை வைத்து அருமையான ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள் :

புளி - நெல்லிக்காய் அளவு
முடக்கத்தான் கீரை - 2 கைப்பிடியளவு 
பூண்டு - 10 பல்
காய்ந்த மிளகாய் - 5
உப்பு - தேவையான அளவு
மிளகு - சீரகத்தூள் - 2 டீஸ்பூன்
நெய் - 50 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை 
கடுகு - 1 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை :

புளியை முதலில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். பின் பூண்டு, மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

கீரையை கழுவி தண்ணீர் சேர்த்து வேகவைத்து ஆறிய பின் வடிகட்டிய தண்ணீரை மட்டும் எடுத்துக் கொண்டால் போதுமானது.

இந்த வடிகட்டிய தண்ணீரில் புளி கரைசல், சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு அரைத்த பூண்டு - மிளகாய் விழுது, மிளகு - சீரகத்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கிக் கொள்ளவும். 

கடைசியாக ஒரு வாணலியில் நெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ரசத்துடன் கலந்து இறக்க வேண்டும்.

கமகமக்கும், சத்தான முடக்கத்தான் ரசம் தயார்.!

English Summary

how to prepare mudakkathaan rasam


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal