நாவூறும் சுவையில் அசத்தலான "நிலக்கடலை பாயாசம்".! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


தித்திப்பான மிகவும் சுவை நிறைந்த நிலக்கடலை பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

நிலக்கடலை - 1 கப்

பொடித்த வெல்லம் - 1 1/2 கப் பால் - 4 கப்

ஏலக்காய் தூள் - சிறிதளவு

நெய் - தேவையான அளவு

முந்திரி - 5

உலர்ந்த திராட்சை - 6

செய்முறை:

முதலில் நிலக்கடலையை வறுத்து தோல் நீக்கி கொள்ளவும். பிறகு வறுத்த நிலக்கடலையை மிக்ஸியில் பொடித்துக்கொள்ள வேண்டும். பின்பு வெல்லத்தை நீர்விட்டு கரைத்து வடிகட்டி, பொடித்த கடலையுடன் சேர்த்து அடுப்பில் கொதிக்க வைக்கவேண்டும். 

பின்பு அதனுடன் பாலையும் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு ஏலக்காய் தூள், நெயில் பொன்னிறமாக வருத்த முந்திரி, திராட்சை சேர்த்தால் சுவையான நிலக்கடலை பாயாசம் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make tasty Peanut payasam


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->