உடல் எடையைக் குறைக்கும் பருப்பு சூப்.!
how to make paruppu soup
தற்போதைய காலகட்டத்தில் உடல் எடையைக் குறைக்க பல்வேறு வழிகளை மக்கள் பயன்படுத்துகின்றனர். இதற்கான ஒரு முறையை இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருள்கள்
பச்சை பயறு அல்லது பாசிப்பருப்பு
வெங்காயம்
தக்காளி
கேரட்
பூண்டு
இஞ்சி
பச்சை மிளகாய்
சீரகம்
மஞ்சள் தூள்
கொத்தமல்லி தூள்
கரம் மசாலா
உப்பு
தண்ணீர்
எண்ணெய் அல்லது நெய்
கொத்தமல்லி இலைகள்
செய்முறை
முதலில் பருப்பை நன்கு கழுவி குறைந்தது 2 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் போட்டு, மஞ்சள் தூள் மற்றும் போதுமான தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி சீரகத்தூள், பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அதன் வாசனை போகும் வரை வதக்கி, நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட் சேர்த்து சமைக்கவும்.
இதில், சமைத்த பருப்பை சேர்த்து கொத்தமல்லி தூள், கரம் மசாலா, உப்பு போட்டு கொதிக்கவிடவும். நன்கு கொதித்தவுடன் இறக்கி அதன் மேல் கொத்தமல்லி இலைகளை தூவி குடித்தால் சுவையான பருப்பு சூப் தயார்.