அசத்தலான ஆட்டுக்குடல் வறுவல் - எப்படி செய்வது?
how to make kudal varuval
நாம் இதுவரைக்கும் ஆட்டுக் குடலை குழம்பு வைத்துதான் சாப்பிட்டிருப்போம். ஆனால், முதன் முறையாக வறுவல் செய்வது குருத்து இங்குக் காண்போம்.
தேவையான பொருட்கள்
ஆட்டுக்குடல், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், தேங்காய் துருவல், உப்பு, எண்ணெய், கடுகு, கருவேப்பிலை

செய்முறை:-
முதலில் ஆட்டுக்குடலை கல் உப்பு போட்டு தேய்த்து நன்றாக சுத்தம் செய்து சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இதனை ஒரு குக்கரில் போட்டு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் வேக வைக்கவும்
நன்கு வந்ததும் தண்ணீரை வடிகட்டி விட்டு குடலை தனியாக எடுத்து வைக்கவும். பின்னர் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியவுடன் வேகவைத்த குடலை சேர்த்து மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு கலந்து மசாலா வாசனை போகும் வரை வதக்கி, பிறகு தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கிளறி விடவும். குடல் தண்ணீரில்லாமல் ட்ரையானதும் இறக்க வேண்டும். தற்போது சுவையான ஆட்டுக்குடல் வருவல் தயார்.
English Summary
how to make kudal varuval