பாட்டியின் அதே பக்குவத்தில், சுவையான கமகம எள்ளுப்பொடி செய்வது எப்படி?..! - Seithipunal
Seithipunal


இட்லி மற்றும் தோசைக்கு நாம் பொதுவாக சாம்பார், சட்னி என விதவிதமாக செய்து சாப்பிட்டு இருப்போம். சிலர் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொடிகளையும், வீடுகளில் செய்யப்படும் பொடிகளையும் வைத்து சாப்பிட்டு மகிழ்ந்திருப்போம். 

இட்லி மற்றும் தோசை பொடிகளை தட்டில் மலைபோல குவித்து, அதன் நடுவே விரலால் குட்டியாக பள்ளம் வெட்டி, அந்த பள்ளத்தில் எண்ணெய் ஊற்றி இட்டிலி பொடியை சேர்த்து கலக்கி, கைகளில் உள்ள எண்ணெய் கலந்த இட்லி பொடியை நக்கி முதலில் சாப்பிட்டு மகிழ்ந்து குதூகலித்திருப்போம். அதெல்லாம் 90 கிட்ஸின் மறக்க முடியாத நினைவுகளாக பலருக்கும் இருக்கும்.

வீடுகளையே இட்லி, தோசைக்கு தேவையான எள்ளு பொடியை எப்படி செய்வது என இனி காணலாம். எள்ளு இயற்கையாகவே உடலுக்கு நன்மையை செய்யும் என்பதால், அதனை சாப்பிடலாம். 

எள்ளுப்பொடி செய்யத் தேவையான பொருட்கள்:

வெள்ளை எள் – 1 கிண்ணம்,
உளுந்தம்  பருப்பு – 3/4 கிண்ணம்,
கடலை பருப்பு – 1/4 கிண்ணம்,
காய்ந்த மிளகாய் – 7,
கறிவேப்பிலை – 10 முதல் 12,
பெருங்காயம் – 1/2 தே கரண்டி,
உப்பு – தேவையான அளவு.

எள்ளுப்பொடி செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட  உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றை மிதமான தீயில் தனித்தனியாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் இதனுடன் காய்ந்த மிளகாயை சேர்த்து, மிளகாய் மனம் மாறும் வரை வறுக்க வேண்டும். இதனையடுத்து கறிவேப்பில்லை சேர்த்து வதக்கி, இறுதியில் எள்ளை தனியாக பொன்னிறமாக மாறும் வரை வறுத்து எடுக்க வேண்டும். 

இதனையடுத்து, அடுப்பை அணைத்து பெருங்காயப்பொடியை சேர்த்து, எள்ளுப்பொடியில் உள்ள சூட்டிலேயே லேசாக வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்கு குளிர்ந்ததும், அவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து தேங்காய் எண்ணெய் சேர்த்து இட்லி மற்றும் தோசையுடன் சாப்பிடலாம். 

சாம்பார் வைத்திருந்தால் அதனுடனும் இட்டிலி பொடியை சேர்த்து சாப்பிடலாம். சுவையாக இருக்கும். தயாரிப்பு முறையில் கருப்பு எள்ளும் சேர்த்துக்கொள்ளலாம்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to Make Ellu Podi or Sesame powder Cooking Tips


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->