பெண்களின் அழகிற்கு அழகு சேர்க்கும் புருவ அழகை பராமரிப்பது எப்படி?.!! - Seithipunal
Seithipunal


பெண்களை பொறுத்த வரையில் முகத்திற்கு அழகு தருவதில் பெண்களின் புருவங்களும் தங்களின் முக்கிய பங்கை அளிக்கிறது. சில பெண்களுக்கு புருவங்கள் அடர்த்தியாகவும்., சிலருக்கு அடர்த்தி குறைவாகவும் இருப்பதுண்டு. இதுமட்டுமல்லாது சிலருக்கு இரண்டு அமைப்பு கொண்ட புருவமும் இருக்கும். 

eye brow, eye brow beauty, beauty tips,

பெண்கள் தங்களின் புருவ அழகை மேம்படுத்துவதற்கு அழகு நிலையங்களுக்கு சென்று அழகை மேம்படுத்துவது உண்டு. அடர்த்தி குறைவான புருவத்தை கொண்ட பெண்கள் சிறிதளவில் விளக்கெண்ணெண்யை தடவி புருவத்தை வளர்த்து அழகாக்குவதும் உண்டு. வட்டமான முகத்தை கொண்ட பெண்கள் அழகு நிலையத்திற்கு சென்று திரெடிங் செய்வது நன்றாக இருக்காது. 

Tamil online news Today News in Tamil

புருவப்பகுதியின் நுனியில் புருவ உரோமத்தை வளைத்து கொடுத்து பராமரித்தல்., வட்ட வடிவமான முகம் பெட்ரா பெண்களுக்கு அழகான தோற்றத்தை ஏற்படுத்தும். சதுரமான முகத்தை பெற்ற பெண்கள் புருவத்தின் நடுவில் வளைவான திரெடிங் செய்வது நன்றாக இருக்கும். நீளமான முக அமைப்பை கொண்ட பெண்கள் புருவத்தின் கடைசியில் வளைத்து கொடுத்தால் அழகாக இருக்கும். 

eye brow, eye brow beauty, beauty tips,

நீள்வட்ட முக அமைப்பை கொண்ட பெண்கள் புருவத்தின் கடைசியில் இல்லாமல் முதற்பகுதியிலேயே லேசாக வளைத்து திரெடிங் செய்வது அழகாக இருக்கும். இதனை போன்று பெண்களின் அழகிற்கு மெருகேற்ற உதடுகளும் பயன்படுகிறது. உதடுகள் மென்மையாக இருக்குமாறு பராமரித்தல் புருவ அழகும்., உதடு எழிலும் அழகிற்கு அழகாக திகழும். 

eye brow, eye brow beauty, beauty tips,

உதடுகள் மென்மையாக இருக்க வெண்ணையை உதடுகளில் பூசுதல்., சந்தனத்தை பன்னீரில் குழைத்து பூசி ஊறவைத்து கழுவுதல்., ரோஜா இதழ்களை பாலில் சேர்த்து அரைத்து உதடுகளில் பூசுதல் போன்றவற்றை மேற்கொள்ளலாம். பாலாடையை உதவுகளில் பூசி வந்தால் உதடு வெடிப்புகள் குறைந்து அழகு பெரும்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to give beauty for eye brow


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->