சத்து நிறைந்த முளைகட்டிய பயிறு சூப்..! ரெசிபி இதோ! - Seithipunal
Seithipunal


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சுவையான முளைகட்டிய சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

முளைக்கட்டிய பயறு கலவை - 1 கப், 

சீரகம் - ஒரு டீஸ்பூன்,

உப்பு -தேவையான அளவு

மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்

தேங்காய் பால் - 1/2 கப்

பூண்டு - 2 பற்கள்

கொத்தமல்லி இலை - சிறிதளவு 

செய்முறை:

முதலில் முளைக்கட்டிய பயறை வேக வைக்கவும். பின்பு சிறிதளவு வேக வைத்த பயறை தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு வேக வைத்த தண்ணீருடன் மீதமுள்ள பயறு, பூண்டு சேர்த்து நன்கு அரைக்கவும். இதையடுத்து அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து தாளித்து, அரைத்த விழுது, சேர்த்து வதக்கவும். பின்பு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

பிறகு சூப் பதத்திற்கு கொதித்ததும் தேங்காய் பாலை ஊற்றி கலந்துவிட்டு ஒரு கொதி வரும்போது மிளகுத்தூள், தனியாக எடுத்து வைத்த பயறு, கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கினால் சுவையான முளைக்கட்டிய பயறு சூப் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Healthy sprouted lentil soup recipe


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->