ஆரோக்கியமான ராஜ்மா ஸ்வீட்கார்ன் சாலட்..! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


ஆரோக்கியம் நிறைந்த சுவையான ராஜ்மா ஸ்வீட்கார்ன் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

ராஜ்மா - 1 கப்

ஸ்வீட்கார்ன் - 1 கப்

தக்காளி - 1

வெங்காயம் - 1

வெங்காயத்தாள் - சிறிதளவு

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

புதினா, கொத்தமல்லி இலை - சிறிதளவு

செய்முறை:

முதலில் ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊறவைத்து கொள்ளவும். பின்பு மறுநாள் ஊற வைத்த ராஜ்மாவை நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பிறகு ஸ்வீட்கார்னையும் வேகவைத்துக் கொள்ளவும். இதையடுத்து வெங்காயம், தக்காளி, புதினா, கொத்தமல்லி வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் வேக வைத்த ராஜ்மா, ஸ்வீட்கார்ன், நறுக்கிய வெங்காயம், தக்காளி, வெங்காயத்தாள், கொத்தமல்லி, புதினா இலை தேவையான அளவு உப்பு, எலுமிச்சை சாறு, மிளகுத்தூள், சேர்த்து நன்றாக கலந்தால் சுவையான ராஜ்மா ஸ்வீட்கார்ன் சாலட் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Healthy Rajma sweetcorn salad recipe


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->