ஆரோக்கியமான ராகி பாதாம் மில்க் ஷேக்.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


சுவையான ஆரோக்கியமுள்ள ராகி பாதாம் மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

ராகி மாவு - 1/2 கப்

பாதாம் - 8

காய்ச்சி ஆறவைத்த பால் - 1 கப்

சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பாதாமை 20 நிமிடம் சுடு நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அரை கப் ராகி மாவுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு கெட்டியாக அல்லது கூழ் பதத்திற்கு ராகியை காய்ச்சி ஆற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு மிக்ஸி ஜாரில் காய்ச்சிய ராகி, ஊற வைத்த பாதாம், காய்ச்சி ஆற வைத்த பால் மற்றும் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஐஸ் க்யூப் சேர்த்தால் சுவையான ராகி பாதாம் மில்க் ஷேக் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Healthy Ragi badam milkshake


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->