சாப்பிட கூடிய நெயில் பாலிஷா.? இது புதுசா இருக்கே..! - Seithipunal
Seithipunal


அழகு என்பது மிகவும் முக்கியமாக இன்றைய காலகட்டத்தில் கருதப்படுகிறது. பெண்கள் எந்த அளவிற்கு தங்களை அழகாக காட்டிக்கொள்ள விரும்புகிறார்களோ அதே அளவிற்கு ஆண்களும் தங்களை அழகாக காட்டி கொள்ளத்தான் எண்ணுகிறார்கள். அழகை மேம்படுத்தி கொள்வது என்பது இன்று நேற்று வந்தது இல்லை. பல ஆயிரம் வருடங்களாக அழகை மேம்படுத்த பலரும் பல விதமான அழகியல் குறிப்புகளை பின்பற்றித்தான் வருகிறார்கள். 

அந்த காலத்து அழகியல் முறை முதல் இந்த காலத்து அழகியல் முறை வரை எண்ணற்ற மாற்றங்கள் அடைந்து கொண்டுதான் இருக்கிறது. அழகியல் கலைகளில் வேதி பொருட்கள் அற்ற முறைகளே எல்லா கால நிலைகளிலும் முன்னோடியாக இருந்து வருகிறது. இயற்கை முறையிலான அழகியல் குறிப்புகளே மக்களுக்கும் பிடித்தமானதாக என்றும் கருதப்படுகிறது. 

அத்தகைய ஒரு அழகியல் கண்டுபிடுப்புதான் சாப்பிடக்கூடிய "நெயில் பாலிஷ்"... என்னது இதை கூடவா சாப்பிட முடியும்..? அப்படினு யோசிக்கிறீங்களா..? இது முற்றிலும் உண்மையே... இந்த பதிவில் அவற்றின் முழு தகவல்களையும் தெரிந்து கொள்வோம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் அழகியல் பொருட்கள்... ஒருவரை அழகு செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது இந்த அழகியல் பொருட்கள்தான். எத்தகைய அழகானவராக ஒருவர் விளங்க வேண்டுமோ அதை அவ்வாறே செய்கிறது இந்த அழகியல் பொருட்கள். ஒருவரின் நகங்களை அழகாக மாற்ற பெரிதும் பயன்படுகிறது இந்த வகையான நெயில் பாலிஷுக்கள். 

இது மிக முக்கியமான அழகியல் பொருளாக அழகு நிபுணர்களால் கருதப்படுகிறது. வண்ணங்கள் ஆயிரம்..! ஒருவரின் நகங்களை அழகு செய்வதில் இந்த நெயில் பாலிஷுக்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக இவை பலவகையான வண்ணங்களில் இருக்கிறது. பெண்களில் விரல் நகங்களை அழகாக காட்டுவதில் இது முதன்மையாக உள்ளது. பலவித வண்ணங்களில் பலவித டிசைன்களை நம்மால் எளிதாக செய்து கொள்ள முடியும். 

பலருக்கும் இதை நகங்களில் வைப்பதால் நகங்களை கடிக்கும்போது இதை சாப்பிடுவதே ஒரு பழக்கமாக மாறி வருகிறது. ஆனால் இந்த வேதி நெயில் பாலிஷுக்கள் பல பாதிப்புகளை தர கூடியது. இந்த இலையும் காயும் பார்த்திருக்கீங்களா? மழைக்காலத்தில் வரும் எல்லா நோய்க்கும் இதுதான் மருந்து நிச்சயமான இளம் பெண்ணிடம் பிராக்கெட் போட்ட ஜொள்ளு பார்ட்டிக்கு கிடைத்த நோஸ்கட் ரிப்ளை! எங்கள தப்பு பண்ண தூண்டுனதே அப்பா தான்...சாப்பிட கூடிய நைல் பாலிஷ்..! நைல் பாலிஷை இப்போதுதான் சாப்பிட கூடாது என்று குறிப்பிட்டர்களே..! 

அதற்குள் சாப்பிடக்கூடிய நைல் பாலிஷ் என்று கூறுகிறீர்களே...? என்ற கேள்வி உள்ளதா...!? உண்மைதாங்க, இப்போது அழகியல் விஞ்ஞானிகள் சாப்பிட கூடிய நைல் பாலிஷை கண்டறிந்துள்ளனர். இது குறிப்பாக குழந்தைகளுக்காகவே பிரேத்தியேகமாக உருவாக்கப்பட்டது என்றே கூறுகின்றனர். இதை கையிலும் வைத்து கொள்ளலாம். அதே நேரத்தில் சாப்பிட்டும் கொள்ளலாம், என இதை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர். 

இதில் உள்ள மூல பொருட்கள்... இந்த நைல் பாலிஷில் பல வகையான மக்க கூடிய பொருட்களே சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது, இவை உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதாம். அத்துடன் இது நச்சு தன்மை அற்றதும் கூட. இது சில வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களினால் செய்யப்பட்டது. குறிப்பாக கேரட், ஆரஞ்ச், பீட் ரூட் , பார்லி இலைகள் போன்றவையில் இருந்து பெறப்படுகிறது. செய்வது எப்படி..? முதலில் சில வகையான இயற்கை கலரிங் பவ்டர்களை வாங்கி கொள்ள வேண்டும். 

அடுத்து ஸ்டார்ச் என்பதையும் வாங்கி கொள்ள வேண்டும். தற்போது, 1 டீஸ்பூன் கலரிங் பவ்டர், 1 டீஸ்பூன் ஸ்டார்ச், சிறிது நீர் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவை நீரை 10 நிமிடம் காய வைக்க வேண்டும். செய்முறை #2 அடுத்து காய்ந்த இந்த கலரிங் நீரை நைல் பாலிஷ் போடும் பிரஷை கொண்டு உங்கள் நகங்களில் வர்ணம் பூசி கொள்ளுங்கள். 

ட்ரையரை(dryer) பயன்படுத்தி நகங்களை காய வையுங்கள். இது உங்கள் கைகளை மிகவும் அழகானதாக காட்டும்.வேண்டுமென்றால் இரண்டாவது கோட்டிங்கையும் நீங்கள் கொடுத்து கொள்ளலாம். பயன்கள்... இது போன்ற நைல் பாலிஷுக்கள் உடலுக்கும் கைகளுக்கும் மிகவும் நன்மை தரும். இதனால் எந்தவித பக்க விளைவுகளும் இல்லை. குழந்தைகளுக்கு நைல் பாலிஷ் வைக்க பயப்படும் பெற்றோர்கள் இதை தாராளமாக பயன்படுத்தலாம். அத்துடன் இதில் எந்தவித வேதி பொருட்களும் சேர்க்கப்படாததால் எந்தவித ஒவ்வாமையையும் ஏற்படுத்தாது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

did u know eating nail polish


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->