பண்டிகை காலங்களில் உங்கள் முகம் பிரகாசிக்க வேண்டுமா?..! உங்களுக்காக இந்த பேஷியல்..! - Seithipunal
Seithipunal


பண்டிகை காலங்களில் முகம் பிரகாசமாக இருக்கவே அனைவரும் விரும்புவர். எனவே பார்லர் செல்லாமல் வீட்டிலேயே முகத்தை பிரகாசிக்க வைக்க காஃபி பேசியல் உதவும் அதனை எப்படி செய்வது என பார்போம்.

முகத்தை சுத்தம் செய்தல் : அரைத்த காஃபி கொட்டை தூளை கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் சேர்த்துக்கொள்ளுங்கள். பின் அதில் காய்ச்சாத பால் இரண்டு ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். அதை இப்போது பஞ்சில் முக்கி முகம் முழுவதும் தேய்க்க வேண்டும். வட்டப்பாதையில் நெற்றி , கண்ணம், மூக்கு என கண்களைத் தவிர அனைத்து இடங்களையும் தேயுங்கள். பின் தண்ணீரில் கழுவி விடுங்கள்.

ஸ்கிரப்: சுத்தம் செய்த பின் ஸ்கிரப் செய்ய வேண்டும். பிரவுன் சுகர் 1 ஸ்பூன், காஃபி தூள் 1 ஸ்பூன் மற்றும் பாதாம் எண்ணெய் 3 சொட்டு விட்டு நன்கு கலந்துகொள்ளுங்கள். அதை அப்படியே எடுத்து முகத்தில் வட்டப்பாதையில் சுற்றி தேய்க்க வேண்டும். நன்கு தேய்க்க இறந்த செல்கள் நீங்கி முகம் சற்று பொலிவு பெறும்.

மாஸ்க்: ஸ்கிரப் செய்த பின் மாஸ்க் போட வேண்டும்.  காஃபி தூள் 1 ஸ்பூன், சந்தனம் 1/2 ஸ்பூன் கடலை மாவு 1/2 ஸ்பூன் எடுத்து கலந்துகொள்ளுங்கள். பின் அதில் ரோஸ் வாட்டர் கலந்து மிக்ஸ் செய்துகொள்ளுங்கள். அதை இப்போது முகத்தில் அப்ளை செய்து அரை மணி நேரம் காய வைத்து பின் கழுவி வர நமது முகத்தை பிரகாசமாக வைக்க உதவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coffee Facial for skin care


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal