இன்றைய ஸ்பெஷல்..!! குழந்தைகள் விரும்பும் சிக்கன் நூடுல்ஸ் சூப்..!! - Seithipunal
Seithipunal


நூடுல்ஸ் என்றால் பிடிக்காத குழந்தைகளே இல்லை எனலாம். குழந்தைகளுக்கு பிடித்த சிக்கன் நூடுல்ஸ் சூப் எப்படி செய்வது என பார்போம்.

தேவையானவை:

நூடுல்ஸ்-100 கிராம்

சிக்கன்-300 கிராம்

கேரட் - 1
வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மிளகு பொடி - தேவையான அளவு
ஆலிவ் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
ஸ்பிரிங் ஆனியன் - 3
பூண்டு - 5 பற்கள்

செய்முறை:

சிக்கனை நன்றாக கழுவிகொள்ளவும். பின்னர் காய்கறிகம் மற்றும் பூண்டை  பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பின்னர் குக்கரில் மூன்று கிளாஸ் தண்ணீர் சேர்த்து அதில் எலும்புகள் கொண்ட சிக்கன் துண்டுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அதோடு காய்கறிகளையும், பூண்டையும் சேர்த்துக் கொள்ளுங்கள். எலும்புகள் இல்லாத சிக்கனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பாத்திரத்தில் ஆலிவ் எண்ணெய் விட்டு எடுத்து வைத்துள்ள எலும்புகள் இல்லா சிக்கினை அதில் போடவும். சிட்டிகை அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

அதில் மிளகு தூள் போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கவும். சிக்கனில் நீர் வற்றி வெந்ததும் அதில் நூடுல்ஸை சேர்த்து அதோடு குக்கரின் வேக வைத்த நீரை ஊற்றி 10 நிமிடங்கள் வேக விடுங்கள்.

கெட்டி பதம் வந்தவுடன் அதில் வேகவைத்த காய்கறிகள் மற்றும் எலும்பு சிக்கனை சேர்த்துக் கொதிக்கவிட்டுக் கிளறுங்கள். சூப்பரான சிக்கன் நூடுல்ஸ் சூப் தாயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chicken Noodles Soup Recipe


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->