கடைகளில் செய்வது போல சூப்பரான சிக்கன் போண்டா ரெசிபி..! - Seithipunal
Seithipunal


மாலை நேரத்தில் டீயுடன் சுவையான சிக்கன் போண்டா செய்து கொடுத்தால் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

தேவையானவை:

சிக்கன் கைமா – கால் கிலோ, சின்ன வெங்காயம் – 50 கிராம், போண்டா மாவு – 250 கிராம், சிக்கன் மசாலா – 3 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பூண்டு – 5 பல், கறிவேப்பிலை – 2 ஆர்க்கு, சோம்பு – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் – ஒரு கைப்பிடி அளவு, பொட்டுக்கடலை – 50 கிராம், இஞ்சி – 2 சிறிய துண்டு, கொத்தமல்லித் தழை – சிறிதளவு. உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை :

சிக்கனை சுத்தம் செய்து சின்ன வெங்காயம், பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய், சோம்பு, மஞ்சள்தூள், பூண்டு, இஞ்சி, மிளகு, சிக்கன் மசாலா, உப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய்விட்டு நறுக்கிய கொத்தமல்லித்தழை, அரைத்த சிக்கன் கலவை சேர்த்து நன்றாக வதக்கவும்.முக்கால் பாகம் வெந்ததும் இறக்கி ஆறியதும் உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.

போண்டா மாவை கரைத்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் உருண்டைகளை மாவில் தோய்து என்ணெயில் போட்டு பொறித்து எடுத்தால் சூப்பரான சிக்கன் போண்டா தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chicken Bonda Recipe


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->