சருமம் பொலிவு பெற.. இதைப் பயன்படுத்தி உங்கள் அழகைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.! - Seithipunal
Seithipunal


மகிழம்பூ :

மகிழம்பூவை சிறிதளவு ஊற வைத்து அரைத்து, தினமும் குளிக்கும்போது இதை பயன்படுத்தினால், வியர்வை நாற்றத்தைப் போக்கலாம். மேலும், சருமப் பிரச்சனைகளை சரி செய்யும். 

சாமந்திப்பூ : 

சாமந்திப்பூவின் இதழ்களை மட்டும் உதிர்த்து எடுத்து, ஒரு வாணலியில் தண்ணீரை நன்கு சூடாக்கி அதில் சாமந்திப் பூக்களைப் போட்டு, அடுப்பை அணைத்துவிட்டு மூடி வைத்து விடவும். ஒரு இரவு முழுவதும் அப்படியே வைத்து மறுநாள் காலையில் அந்த தண்ணீரை வடிகட்டி, அதில் முகம் கழுவினால், முகம் பொலிவு பெறும். 

இந்த சாமந்திப்பூவின் தண்ணீரை இரண்டு நாட்களுக்கு ஃப்ரிட்ஜில் வைத்தும் உபயோகப்படுத்தலாம்.

மரிக்கொழுந்து :

மரிக்கொழுந்து சாறுடன், சந்தனத்தை சேர்த்து முகம், கை, கால்களில் தேய்த்து மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், சரும நிறம் கூடும்.

செம்பருத்தி :

செம்பருத்தி பூவுடன், பாதாம் பருப்பு சேர்த்து ஊற வைத்து, அரைத்து வெயில்படும் சருமப் பகுதிகளில் எல்லாம் தடவி, அரை மணி நேரம் கழித்து கழுவினால், தோல் மென்மையாக மாறும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

beauty tips 7


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->